பலன் பயக்கும் சிறப்பான திட்டம்

பலன் பயக்கும் சிறப்பான திட்டம்

1 mins read
2fc2446c-5c3b-4097-bd39-85ca8c3f7ed0
-

துறை அடிப்படையில் மட்டுமல்லாமல் எந்தத் துறையில் இருந்தாலும் வேலை கள் அடிப்படையில் படிப்படியாக உயரும் சம்பளமுறையை செயல்படுத்தவுள்ள அறிவிப்பு சிறப்பான திட்டம் என்று புகழ்ந்தார் சான்றிதழ் பெற்ற பாதுகாப்பு முகவர் சங்கத்தின் கௌரவச் செயலாளர் திரு கேரி ஹாரிஸ் (படம்). அவர் சார்ந்துள்ள துறையில் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாகப் படிப்படியாக உயரும் சம்பளமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

"உதாரணத்திற்கு நிர்வாக உதவியாளர்கள் பலருக்கு ஏறத்தாழ பத்தாண்டுகளாக சம்பளம் தேங்கிக்கிடக்கிறது. பெரும்பாலான துறைகளில் நிர்வாக உதவியாளர்கள் பணி யாற்றுகின்றனர். அதனால் புதிய திட்டம் சீரான, திடமான, முற்போக்கான கொள்கையாக விளங்கும்," என்றார்.

"பாகுபாட்டைக் களையவும் புதிய சட்டம் வரையப்படு

வதும் நாம் வரவேற்கவேண்டிய அம்சம். இனம், வயது, பாலினம் என பல காரணங்களால் பாகுபாடு காட்டுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் முறை அனைவருக்கும் நன்மை தரும்," என்றார் திரு கேரி ஹாரிஸ்.