விநியோக ஊழியர்களுக்கு மேம்பட்ட வேலைப் பாதுகாப்பை மனிதவள அமைச்சு ஆராயும்

2 mins read
7f1b13ad-73d9-497b-a253-c1b21a2d84d6
-

விநி­யோக ஊழி­யர்­க­ளுக்­கான வேலைப் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வது குறித்து மனி­த­வள அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தாக பிர­த­மர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரை­யில் குறிப்­பிட்­டார்.

இணை­யத்­த­ளங்­க­ளுக்­காக விநி­யோ­கப் பணி­யில் ஈடு­பட்­டுள்ள ஊழி­யர்­க­ளுக்கு அடிப்­படை வேலைப் பாது­காப்பு இல்­லாத சூழல், வளர்ந்து வரும் ஒரு சிக்­கல் என்­றும் இத­னால் அவர்­க­ளுக்கு மேலும் பாது­காப்­பான ஓர் எதிர்­கா­லத்தை உரு­வாக்­கித் தரு­வ­தில் அமைச்சு கவ­னம் செலுத்தி வரு­கிறது என்­றும் அவர் கூறி­னார்.

அதி­லும் கொவிட்-19 கொள்­ளை­நோய் நெருக்­க­டிக்­கி­டையே உணவு விநி­யோ­கங்­கள் பெரு­ம­ளவு அதி­க­ரித்த நிலை­யி­லும் இக்­கு­றிப்­பிட்ட குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளின் வரு­மா­னம் அதி­க­மாக இல்லை என்­பது தமக்­குக் கவலை அளிக்­கும் ஒன்­றாக இருப்­ப­தை­யும் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

'கிராப்', 'ஃபுட்பேன்டா', 'டெலி­வரூ' போன்ற நிறு­வ­னங்­கள், தங்­க­ளின் ஊழி­யர்­க­ளுக்கு எத்­த­கைய பணி­கள் தரப்­பட வேண்­டும் என்­றும் ஊழி­யர்­க­ளின் செயல்­தி­றன் எவ்­வாறு உள்­ளது என்­றும் நிர்­வ­கித்து வரு­கின்­றன. விநி­யோ­கப் பணியை மிக மெது­வா­கச் செய்­வது போன்ற அம்­சத்­துக்­கும் ஊழி­யர்­கள் தண்­டிக்­கப்­ப­ட­லாம்.

இந்­நி­லை­யில், விநி­யோக ஊழி­யர்

­க­ளுக்கு வேலை ஒப்­பந்­தம் இல்­லாத கார­ணத்­தால் ஊழி­யர்­க­ளுக்­குக் கிடைக்­கும் அடிப்­ப­டைப் பாது­காப்பு இல்­லா­மல் போகிறது. வேலை­யி­டக் காயங்­க­ளுக்கு இழப்­பீடு, தொழிற்­சங்க ஆத­ரவு, முத­லா­ளி­யின் மத்­திய சேம நிதி பங்­க­ளிப்பு போன்ற சலு­கை­கள் கிடைக்­கா­மல் போகின்­றன.

"எல்லா ஊழி­யர்­கள் போன்­ற­வர்­கள்­தான் விநி­யோக ஊழி­யர்­கள்," என்று குறிப்­பிட்­டார் பிர­த­மர் லீ. மோச­மான வானிலை, மோட்­டார் வண்டி பழு­த­டை­தல், பய­மு­றுத்­தும் நாய்­கள் எனத் தங்­க­ளின் கட்­டுப்­பாட்டை மீறிய கார­ணங்­க­ளால் விநி­யோக ஊழி­யர்­க­ளுக்கு நெருக்­கு­தல் ஏற்­ப­டவே செய்­கிறது. சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் விநி­யோக ஊழி­யர்­க­ளுக்கு ஒவ்­வொரு விநி­யோ­கத்­திற்­கும் $6.50 முதல் $7.50 வரை கிடைப்­ப­தா­கக் கடந்­த­கால தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

இத்­த­கைய பணி­யில் ஈடு­ப­டு­வ­தில் கூடு­தல் நபர்­கள் ஆர்­வம் காட்­டத் தொடங்­கி­யுள்ள நிலை­யில், மற்ற ஊழி­யர்­க­ளுக்­குப் பாது­காப்பு தரும் வேலை நிய­ம­னச் சட்­டம், இவர்­க­ளுக்கு இல்லை என்ற நிலை நிலவி வரு­கிறது. மனி­த­வள அமைச்சு வெளி­யிட்ட ஆக அண்­மைய புள்­ளி­வி­வ­ரங்­களின்­ படி, 2020ல் தங்­க­ளின் சொந்தக் கணக்­கில் தின­சரி வேலை­யில் ஈடு­பட்­டுள்ள ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை 228,200 என்று கூறப்­பட்­டது. இது 2019ல் 211,000ஆக இருந்­தது. விநி­யோக ஊழி­யர்­க­ளைத் தவிர, மற்ற வேலை­களில் உள்ள குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்­கும், முத­லாளி போன்று இயங்­கும் இணை­யத்­த­ளங்­க­ளு­டன் உறவு உள்­ள­தென பிர­த­மர் சுட்­டி­னார்.

வீட­மைப்பு, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, நாள­டை­வில் பணி ஓய்வு போன்ற அம்­சங்­கள் தொடர்­பில் அவர்­க­ளுக்­கும் சிக்­கல்­கள் ஏற்­படும் என்­றார் அவர்.

"மேலும் பலர் இத்­த­கைய வேலை­யில் ஈடு­ப­டத் தொடங்­கி­யுள்­ள­னர். அத­னால் இது பெரி­தாகி வரும் ஒரு சிக்­கல்," என்­றார். மனி­த­வள அமைச்சு இதை ஆராய்ந்து வரு­கிறது. இது தொடர்­பில் ஆலோ­ச­னை­யும் நடத்­தும். இத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்கு மேலும் பாது­காப்­பான எதிர்­கா­லத்தை உரு­வாக்­கித் தர, இந்த விவ­கா­ரங்­களை நாம் கையாள்­வது அவ­சி­யம்," என்று தம் உரை­யில் குறிப்­பிட்­டார் திரு லீ.