சிங்கப்பூர் எப்படிப்பட்ட நாடு என்பதை சிங்கப்பூரர் அல்லாதோர் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்

சிங்கப்பூர் எப்படிப்பட்ட நாடு என்பதை சிங்கப்பூரர் அல்லாதோர் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்

2 mins read
ac5478ad-6d10-40bd-b288-e3fd2bdc23ef
-

அதி­க­மான வேலை அனு­ம­திச் சீட்டு ஊழி­யர்­கள் இருக்­கும் வேலை­யி­டப் பிரச்­சி­னை­களை அதி­கா­ரி­கள் சமா­ளிக்­கும் அதே வேளை­யில் அவர்­க­ளது சமூ­கத் தாக்­கத்­தி­லும் கவ­னம் செலுத்­த­வேண்­டும் என்­றார் பிர­த­மர் லீ.

வேலை அனு­மதி அட்­டை­யில் வேலை செய்­வோர் சீன­ரா­கவோ மலாய்க்­கா­ர­ரா­கவோ இந்­தி­ய­ரா­கவோ இருந்­தா­லும்­கூட அவர்­கள் கலா­சார ரீதி­யாக சிங்­கப்­பூ­ரர்­க­ளை­விட வேறு­பட்­டுள்­ள­னர் என்­றார் அவர்.

''சொல்­லப்­போ­னால் அவர்­கள் இன­ரீ­தி­யாக நம்­மைப்போல் இருப்­ப­தால்­தான் சில சம­யம் சச்­ச­ர­வு­கள் எழு­கின்­றன. அவர்­கள் பார்ப்­ப­தற்கு நம்­மைப் போல இருக்­கி­றார்­கள் ஆனால் நம்­மைப் போன்று நடந்து­ கொள்­வ­தில்லை,'' என்­றார் பிர­த­மர். இது புரிந்­து­கொள்­வ­தற்­குச் சிர­மம்­தான் என்­றும் அதற்கு தாம் ஒரு வெளி­நாட்டுத் தலை­வ­ரு­டன் சிங்­கப்­பூ­ரின் பல இன சமூ­கத்­தைப் பற்றி விளக்க முற்­பட்ட அனு­ப­வத்தை திரு லீ பகிர்ந்­து­கொண்­டார்.

இரு தலை­மு­றை­க­ளுக்­குப் பிறகு, சிங்­கப்­பூர் இந்­தி­யர்­கள் இந்­தி­யா­வின் இந்­தி­யர்­க­ளை­வி­ட­வும் சிங்­கப்­பூர் சீனர்­கள் சீனா­வின் சீனர்­க­ளை­வி­ட­வும் மாறு­பட்டு இருக்­கி­றார்­கள் என்­பதை அந்த வெளி­நாட்­டுத் தலை­வ­ரி­டம் விளக்­கி­ய­தா­க­வும் அவ­ருக்கு ஆங்­கி­லம் புரிந்­தி­ருந்­தா­லும் தாம் சொன்­ன­வற்றை அவ­ரால் முழு­மை­யா­கப் புரிந்­து­கொள்­ள­மு­டி­ய­வில்லை என்றே தாம் அப்­போது உணர்ந்­த­தா­கவும் திரு லீ கூறி­னார்.

வெளி­நாட்­டுக் குடி­யேற்ற வேர்­க­ளைக் கொண்ட சிங்­கப்­பூர் பொது­வாக சமத்­து­வ­மான சமூ­கம் என்­றும் பல ஆண்­டு­கள் இங்கு வசித்த பிறகு சில வெளி­நாட்­ட­வர் இங்கு குடும்­பங்­களை அமைத்­துள்­ள­தா­க­வும் அவர்­கள் 'சிங்­கி­லிஷ்' பேசி உள்­ளூர் உண­வு­

க­ளை­யும் ரசித்து உண்­கி­றார்­கள் என்­றும் பிர­த­மர் சுட்­டி­னார்.

''ஆனால் வேலை அனு­ம­திச் சீட்­டில் உள்ள சில­ரும் அவர்­க­ளது குடும்­பங்­களும் அவர்­க­ளது சமூ­கப் பழக்­க­வ­ழக்­கங்­க­ளை­யும் அவர் களின் நாட்டிலுள்ள வர்க்க பேதங்­ க­ளை­யும் இங்கு கொண்­டு­வ­ரு­கி­றார்­கள். இது சிங்­கப்­பூ­ரர்­கள் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் சம­மாக, பாகு­பா­டின்றி பழ­கு­வ­தற்கு எதிர்­ம­றை­யா­னது. இத­னால் சச்­ச­ர­வு­கள் ஏற்­ப­டு­கின்­றன. இங்கு சமூ­கத்­து­டன் ஒன்­றி­ணைய சிங்­கப்­பூர் எப்­ப­டிப்­பட்­டது என சிங்­கப்­பூ­ரர் அல்­லா­த­வர் புரிந்து நடந்­து­கொள்­ள­வேண்­டும்,'' என்றார் திரு லீ.