நியாயமான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் இனி சட்டமாகும்

நியாயமான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் இனி சட்டமாகும்

1 mins read
f2222b5b-c241-445f-97a1-25af01d95122
-

வேலை­யிட பாகு­பாட்­டுக்கு எதி­ராக இருந்து வரும் வழி­காட்­டு­தல்­கள் இனி சட்­ட­மாக்­கப்­படும். இத­னால் வேலை­யி­டத்­தில் ஊழி­யர்­கள் நியா­ய­மாக நடத்­தப்­ப­டு­வது தொடர்­பில் மேலும் அதி­க­மான தெரி­வு­களை அர­சாங்­கம் பெறும் என்­றார் பிர­த­மர் லீ.

"சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு எதி­ரான நியா­ய­மற்ற வேலை நிய­மன நட­

வ­டிக்­கை­க­ளைக் கையாள இது உத­வும். வேலை­யிட பாகு­பாட்டை எதிர்­கொள்ள நடை­மு­றை­யில் இருக்­கும் டஃபெப் (TAFEP) எனும் நடு

­நி­லை­யான வேலை­வாய்ப்பு நடை­மு­றை­கள் மீதான முத்தரப்பு வழி­காட்­டு­தல்­கள் சட்­ட­பூர்­வ­மாக்­கப்­

ப­டு­வது பெரி­யதொரு முடிவு. வேலை­யி­டங்­களில் பாகு­பா­டு­கள் இருப்­பதை சிங்­கப்­பூர் ஏற்­றுக்­கொள்­ளாது என்­ப­தற்கு இது ஓர் அறி­குறி," என்றார் பிரதமர்.

வேலை­கள், வேலை­யி­ட வாய்ப்­பு­கள் ஆகி­ய­ன தொடர்­பில் வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போ­ரு­டன் நடுத்­தர வரு­மான சிங்­கப்­பூ­ரர்­கள் போட்­டி­யி­டு­வது தொடர்­பில் எழுந்து வரும் கவ­லை­களை குறிப்­பிட்­ட திரு லீ, இத­னால், வேலை­யிட பாகு­பாட்­டைக் கையாள்­வ­தற்­கென ஒரு தீர்ப்­பா­யத்தை உரு­வாக்­கு­வது அர­சாங்­கத் திட்­டங்­க­ளில் முக்­கி­ய­மான ஒன்று என்றார்.