புதிதாக 147 பேருக்கு சமூகத்தொற்று

புதிதாக 147 பேருக்கு சமூகத்தொற்று

1 mins read
63c83058-5cf7-4a66-9335-75fdd873a812
-
Google News Preferred Icon

சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி சமூகத்தில் புதிதாக 147 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்களில் 53 பேர் முந்தைய நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும் 42 பேருக்கு முந்தைய நோயாளிகளுடன் தொடர்புண்டு. ஆனால் தொற்று கண்டறியப்பட்டபோது இவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. எஞ்சிய 52 பேருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை என அமைச்சு தெரிவித்தது.

வெளிநாடுகளில் இருந்து வந்த எட்டுப் பேருக்கும் தொற்று உறுதியானது.

சிங்கப்பூரில் நேற்று புதிதாக மொத்தம் 155 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களை யும் சேர்த்து கொவிட்-19 கிருமி தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 67,459 ஆகியது.