நடுநிலையான, வேலைவாய்ப்பு நடைமுறைகள் மீதான முத்தரப்புக் கூட்டணியின் வழிகாட்டி நெறிமுறைகள் சட்டமாக்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்தார்.
அந்த அறிவிப்பை அதிபர் ஹலிமா யாக்கோப் வரவேற்றார்.
நியாயமான வேலை இடங்களை உருவாக்குவதற்கான சிங்கப்பூரின் பயணத்தில் இது ஒரு நல்ல முன்னேற்றம் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று அதிபர் தெரிவித்தார்.
வேலையிடங்களில் பாரபட்சமான போக்கை சிங்கப்பூர் சகித்துக்கொள்ளாது என்பதற்கான அறிகுறியை அந்த அறிவிப்பு புலப்படுத்துவதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையைக் கையாளுவதற்குத் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்படும்.
தேசியம், வயது, இனம், சமயம், உடற்குறை ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை அது தடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண் தாதியர் வரும் நவம்பர் முதல் தலையங்கி அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் அறிவித்து உள்ளதையும் அதிபர் பாராட்டி வரவேற்றார்.

