கடுமையான மழை; இரண்டு பகுதிகளில் திடீர் வெள்ளம்

1 mins read
ddae47ad-20f6-4231-922c-e9d41ba7dca0
ஹவ்காங் அவென்யூ 8ல் நேற்றுக் காலை இந்த நிலை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்று பெய்த மழை காரணமாக ஹவ்காங் அவென்யூ 8 பகுதியிலும் தெம்பனிஸ் விரைவுச் சாலைக்குச் செல்லும் பொங்கோல் வே துணைச் சாலையிலும் காலையில் வெள்ளம் ஏற்பட்டது. பல பகுதிகளிலும திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரித்தது.

வெள்ளம் ஏற்பட்ட இரண்டு இடங்களிலும் மக்களுக்கு உதவுவதற்ாக அதிகாரிகள் பிரித்துவிடப்பட்டதாக சமூக ஊடகத்தில் கழகம் கூறியது. இரண்டு இடங்களிலும் வெள்ளம் பிறகு வடிந்துவிட்டது.

கடும் மழை காரணமாக பல வடிகால்களும் கால்வாய்களும் ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டியதாகவும் கழகம் தனியாக தெரிவித்தது. அடுத்த இரண்டு மாதங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என்று ஆகஸ்ட் 28ஆம் தேதி வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைத்தது.