மனநலம் தொடர்பில் பெற்றோருக்கு இலவச இணையப் பயிலரங்குகள்

மனநலம் தொடர்பில் பெற்றோருக்கு இலவச இணையப் பயிலரங்குகள்

2 mins read
a94aa0be-597e-4ba5-9dd1-c4f3f436003e
-

பிள்­ளை­க­ளின் மன­ந­லனை மேம்­ப­டுத்த உத­வும் இல­வ­சப் பயி­ல­ரங்­கு­கள் அக்­டோ­பர் மாதம் முதல் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

உயர்­நி­லைப் பள்ளி பயி­லும் பிள்­ளை­க­ளைக் கொண்ட பெற்­றோர்­க­ளுக்­காக இப்­ப­யி­ல­ரங்­கு­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தின் 'கலர்ஸ் ஆஃப் தி மைன்ட்' திட்­டத்­தின்­கீழ் இந்­தப் பயி­ல­ரங்­கு­கள் நடத்­தப்­படும்.

பிள்­ளை­க­ளின் மன­ந­லம், சமூக மற்­றும் உணர்வுரீதி­யான நுண்­ண­றிவு, மீள்­தி­றன் ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­தும் திறன்­களை இப்­ப­யி­ல­ரங்­கு­கள் மூலம் பெற்­றோர்­கள் பெறு­வர் என்று வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.

வய­துக்கு ஏற்ற தக­வல்­களும் நட­வ­டிக்­கை­களும் இப்­ப­யி­ல­ரங்­குத் திட்­டத்­தில் அடங்­கும் என்று வாரி­யம் தெரி­வித்­தது.

ஒவ்­வொரு பயி­ல­ரங்­கி­லும் 100 பெற்­றோர் வரை கலந்­து­கொள்­ள­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

ஆரம்­பக் கல்வி, மன­நல ஆலோ­சனை, உள­வி­யல் அல்­லது சமூ­கச் சேவைத் துறை­களில் கல்­வித் தகு­தி­களை உடைய இரண்டு பயிற்­று­நர்­கள், பயி­ல­ரங்­கு­களை நடத்­து­வர்.

பிள்­ளை­க­ளி­டம் உணர்­வு­க­ளைப் பற்றி பேசு­வ­தன் முக்­கி­யத்­து­வம், உணர்­வு­களை எவ்­வாறு கையாள்­வது தொடர்­பான வழி­காட்­டு­தல், தங்­க­ளை­யும் பெற்­றோர்­கள் பரா­ம­ரித்­துக்கொள்ள வேண்­டி­ய­தன் தேவை போன்ற அம்­சங்­கள் பயி­ல­ரங்­கு­களில் இடம்­பெ­றும்.

ஒரு­வர் பேச, மற்­ற­வர்­கள் கேட்­டுக்­கொள்­ளும் பாணி, முடிந்த அள­வுக்கு இந்­தப் பயி­ல­ரங்­கு­களில் குறை­வாக இருக்­கும் என்று கூறப்­பட்­டது.

பாத்­தி­ர­மேற்று நடித்­தல், குழுக் கலந்­து­ரை­யா­டல்­கள் போன்ற அங்­கங்­கள் மூலம் இரு­வ­ழித் தொடர்­பு­டைய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று கூறப்­பட்­டது.

பள்­ளி­கள், சமூக பங்­கா­ளி­கள் ஆகிய தரப்­பு­க­ளு­டன் வாரி­யம் இணைந்து பயி­ல­ரங்­கு­களை இணை­யத்­த­ளங்­கள் வாயி­லாக நடத்­தத் திட்­ட­மிட்­டுள்­ளது.

முன்­ன­தாக, பயி­ல­ரங்­குத் திட்­டம் 2013ஆம் ஆண்­டில் அறி­மு­கம் செய்­யப்­பட்­டது.

இரண்டு முதல் ஆறு வய­து­­உடைய பிள்­ளை­க­ளைக் கொண்ட பெற்­றோ­ருக்­காக தொடங்­கப்­பட்ட திட்­டம், பின்­னர் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளின் பெற்­றோருக்கும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

மாண­வர்­க­ளின் மன­ந­லம் அண்­மை­யில் பெரி­தும் பேசப்­படும் ஒன்­றா­கி­விட்­டது.

கடந்த மாதம் 13 வயது ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்ளி மாண­வரை 16 வயது மாண­வர் தாக்­கிக் கொன்ற சம்­ப­வம் பல­ரை­யும் பாதித்­தது.

தற்­போது அந்த 16 வயது மாண­வர் மீது கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

மன­நல மதிப்­பீட்­டுக்­காக அந்த மாண­வர் தடுப்­புக் காவ­லில் உள்­ளார்.

இது­போன்ற துய­ரச் சம்­ப­வங்­கள் மீண்­டும் நடக்­கா­மல் இருப்­

ப­தற்கு சமூக அள­வி­லான ஒரு முயற்சி தேவைப்­ப­டு­வ­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கூறி­யி­ருந்­தார்.

மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளு­டன் தவிக்­கும் இளை­யர்­க­ளுக்கு, தங்­க­ளின் பெற்­றோர்­க­ளுக்­குத் தெரிந்­து­வி­டுமோ என்ற அச்­சம் அடிக்­கடி ஏற்­ப­டு­வது உண்டு.

தங்­க­ளின் பிள்­ளை­யி­னது கல்வி அல்­லது வேலை தொடர்­பான வாய்ப்­பு­க­ளுக்கு இது­போன்ற மன­நல விவ­கா­ரங்­கள் களங்­க­மாக இருக்­க­லாம் என்று சில பெற்­றோர்­நினைப்­ப­தா­க­வும் நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.