'சிங்கப்பூர்ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டுகளுக்கு அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்

'சிங்கப்பூர்ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டுகளுக்கு அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்

2 mins read
ead081db-d5da-46ee-9caf-5e3fffad5d85
-

சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­கான சுற்­றுலா பற்­றுச்­சீட்­டு­க­ளுக்­காக இனி அடை­யாள அட்­டை­யை­யும் பயன்­ப­டுத்­த­லாம். அடை­யாள அட்டை, தேசிய சேவை அடை­யாள அட்டை, சிங்­கப்­பூர் கடப்­பி­தழ் போன்­ற­வற்றை அடை­யா­ளத்­திற்­கான ஆதா­ர­மா­கக் காட்டி மக்­கள் தங்­க­ளின் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்று சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் அறி­வித்­துள்­ளது.

இந்­ந­டை­முறை நேற்று முதல் அமல்­ப­டுத்­தப்­பட்­டது. இதன்­படி, இங்­குள்ள 34 சமூக மன்­றங்­கள் மற்­றும் வசிப்­போர் குழுக்­களை மக்­கள் அணு­கி தங்­க­ளின் சுற்­றுலா பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான உத­வி­யைப் பெற­லாம். பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­

ப­டுத்­தும் செயல்­முறை, தொழில்­நுட்­பப் பயன்­பாட்­டில் சிர­மம் இருப்­ப­வர்­க­ளுக்­கும் முதி­யோ­ருக்­கும் சற்று சவால்­மிக்­க­தாக இருப்­ப­தாக கடந்த ஆண்டு பலர் தங்­க­ளின் அக்­க­றை­யைத் தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து, பற்­றுச்­சீட்­டுத் திட்­டத்தை எவ்­வாறு மேம்­ப­டுத்­த­லாம் என்று பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து கருத்து திரட்­டி­ய­தாக பய­ணத்­

து­றைக் கழ­கம் கூறி­யது.

"பற்­றுச்­சீட்­டைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள ஐந்து பங்­கா­ளி­க­ளு­ட­னும் பய­ணத்­து­றைக் கழ­கம் இணைந்து செயல்­முறை தொடர்­பில் ஆராய்ந்­தது," என்று குறிப்­பிட்­டது கழ­கம்.

முன்­பாக சுற்­றுலா பற்­றுச்­சீட்­டு­களை 'சிங்­பாஸ்' கொண்டு பெற்­றுக்­கொள்ள முடி­யும். இனி, அடை­யாள அட்­டைப் பயன்­பாட்­டால், சிங்­கப்­பூ­ரர்­கள் மேலும் எளி­தான முறை­யில் தங்­க­ளின் சிங்­பாஸ் கணக்­கு­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று கூறப்­பட்­டது.

சமூக மன்­றங்­க­ளை­யும் வசிப்­போர் குழுக்­க­ளை­யும் அணு­கும்­போது, பாது­காப்­பு­மிக்க அர­சாங்­கச் செயலி மூலம் ஒரு­வ­ரது அடை­யா­ளப் பத்­தி­ரம் 'ஸ்கேன்' செய்­யப்­படும். அதை­ய­டுத்து தனிப்­பட்ட ஒரு பற்­றுச்­சீட்டு குறி­யீடு தரப்­படும்.

பின்­னர், அங்­குள்ள பணி­யா­ளர்­கள் குறி­யீட்­டைக் கொண்டு சுற்­று­லா­வுக்­கான பதி­வுக்கு உத­வு­வர். ஆகஸ்ட் 1 நில­வ­ரப்­படி, பற்­றுச்­சீட்டை ஒரு முறை­யா­வது பயன்

­ப­டுத்­தி­ய­வர்­கள் 1 மில்­லி­யன் பேர்.