ஊடக வர்த்தகத்தைத் தனியாகப் பிரிக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்கைளக் கேட்டுக்கொள்ள இருக்கிறது. செப்டம்பர் 10ஆம் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் இந்த வேண்டுகோள் வைக்கப்பட இருப்பதாக அதன் அங்கீகாரப் பிரதிநிதி நிறுவனமான கிளாஸ் லெவிஸ் கூறியது.
ஊடக வர்த்தகத்தின் கணிசமான தொடர் நஷ்டத்தையும் மாற்று வர்த்தகத்திற்கு வரையறுக்கப்பட்ட அளவிலேயே வாய்ப்பு இருப்பதையும் கவனத்தில் கொண்டு, உத்தேசிக்கப்பட்டுள்ள மறுகட்டமைப்பு நடைமுறையை பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள் என்று அந்த அமெரிக்க நிறுவனம் தனது அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எஸ்பிெஹச் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட எவர்கோர் ஏஷியா (சிங்கப்பூர்) என்னும் சுய நிதி ஆலோசனை நிறுவன மும் இருவாரங்களுக்கு முன் இதே கருத்தைத் தெரிவித்தி ருந்தது. ஊடக வர்த்தகத்தை மறுசீரமைக்கும் உத்தேசத் திட்டம் ஒட்டுமொத்த நிறு வனம் மற்றும் பங்குதாரர்களின் முடிவைப் பொறுத்தது என்று ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளி யிட்ட கடிதத்தில் அது கூறியது.

