சாப்பாடுத் தட்டு விதி: நாளை முதல் அபராதம்

2 mins read
1e953abd-6805-4ec9-9121-ea0368b87288
தாங்­கள் பயன்­ப­டுத்­திய தட்­டு­க­ளை­யும் கோப்­பை­க­ளை­யும் உரிய இடத்­தில் வைக்­கும் வாடிக்­கை­யா­ளர்­கள். படம்: ஸ்‌ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உணவு நிலை­யங்­க­ளி­லும் உண­வங்­காடி­க­ளி­லும் காப்­பிக்

கடை­க­ளி­லும் சாப்­பி­டு­வோர் தங் க­ளது சாப்­பாட்­டுத் தட்­டு­களை எடுத்­து உரிய இடங்­களில் வைத்து மேசை­யைச் சுத்­த­ம் செய்ய வேண்­டி­யது ஜூன் 1 முதல் கட்­டா­ய­மா­னது. கட்­டா­யம் என்­ற­போ­தி­லும் தற்­போது விதியை மீறு­வோர் மீது நட­ வடிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை.

நாளை செப்­டம்­பர் 1 முதல் உண­வங்­காடி நிலை­யங்­களில் இவ்­விதி அமல்­ப­டுத்­தப்­படும். அதன்­படி நாளை முதல் விதி மீறு­வோ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும். இது மூன்­று­மாத நினை வூட்­டுக் காலத்­துக்­குப் பின் நடப்­புக்கு வர­வி­ருக்­கிறது.

உணவு நிலை­யங்­க­ளி­லும் காப்­பிக்­க­டை­க­ளி­லும் இவ்­விதி இவ்­வாண்டு இறு­திக்­குள் அம­லாக்­கம் காணும் என்று மே மாதம் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தா­லும், இதை நடை­மு­றை­யாக்­கிக்­கொள்ள மக்­க­ளுக்கு உதவ, முத­லில் இரண்டு மாத கால நினை­வூட்டு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.

நவம்­பர் 1லிருந்து டிசம்­பர் 31வரை தட்­டு­களை உரிய இடத்­தில் வைப்­ப­தற்­கும் மேசை­யைச் சுத்­தம் செய்­வ­தற்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நினை­வூட்­டப்­படும்.

நினை­வூட்­டி­யும் அவ்­வாறு செய்ய மறுப்­போ­ரின் விவ­ரங்­கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்டு அவர்­க­ளுக்கு எழுத்­து­பூர்­வ­மான எச்ச ரிக்கை விடுக்­கப்­படும். அதை­யும் மீறு­வோ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

இந்த அம­லாக்க நட­வ­டிக்கை உண­வங்­கா­டி­க­ளி­லும் காப்­பிக் கடை­க­ளி­லும் உண­வ­ருந்­தும் அனைத்து வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் பொருந்­தும்.

சுய­மாக உணவு வாங்கி மேசைக்­குத் தூக்கி வர முடி­யாத பல­வீ­ன­மான மூத்­தோர் மீதும் சிறு­வர்­கள் மீதும் நட­வ­டிகை எடுக்­கப்­ப­டாது என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யமும் சிங்­கப்­பூர் உணவு அமைப்­பும் கூறின.

மே மாத அறி­விப்­பை­ய­டுத்து தட்­டு­களை உரிய இடத்­தில் வைப்­போ­ரின் விகி­தம் 30லிருந்து 65க்கு உயர்ந்­துள்­ளது.

சாப்­பாட்­டுத் தட்­டு­களை ஒப்­ப­டைக்­கக் கூடு­தல் வசதி

களாக தள்­ளு­வண்­டி­களும் அறி­மு­கம் காணும்.

அவற்றை இடுக்­கு­களில் நிறுத்தி வைக்­கக்­கூ­டும். இது மக்­கள் தாங்­கள் பயன்­ப­டுத்­திய தட்­டு­க­ளைத் தூக்­கிக்­கொண்டு நடக்­க­வேண்­டிய தூரத்­தைக் குறைக்க உத­வும்.

இதனை அடுத்து உண­வங்­கா­டி­களில் தற்­போது உள்ள 900 இடங்­க­ளுக்கு மேல், தட்­டு­களை வைக்க புதிய 150 நிரந்­தர இடங்­கள் உரு­வாக்­கப்­படும்.

காப்­பிக்­க­டை­க­ளி­லும் உணவு நிலை­யங்­க­ளி­லும் பயன்­ப­டுத்­திய இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளால் துப்­பு­ர­வுப் பணி­க­ளுக்­கான செலவு இத­னால் குறை­யா­தென்று தேசிய சுற்­றுப் புற வாரி­யம் குறிப்­பிட்­டது.

துப்­பு­ர­வா­ளர்­கள் கிரு­மி­நா­சி­னி­யால் மேசை­யைத் துடைக்­கும் பணி தொட­ரும் என்­றும் அது தெரி­வித்­தது.

சுய­சே­வை­யின் வழி துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­க­ளின் பற்­றாக்­கு­றை­யைக் குறித்­தும் காலப்­போக்­கில் அதற்­கான செல­வைக் குறைப்­பது குறித்­தும் மக்­கள் தங்­கள் பங்­கை­யாற்­ற­லாம்.