உணவு நிலையங்களிலும் உணவங்காடிகளிலும் காப்பிக்
கடைகளிலும் சாப்பிடுவோர் தங் களது சாப்பாட்டுத் தட்டுகளை எடுத்து உரிய இடங்களில் வைத்து மேசையைச் சுத்தம் செய்ய வேண்டியது ஜூன் 1 முதல் கட்டாயமானது. கட்டாயம் என்றபோதிலும் தற்போது விதியை மீறுவோர் மீது நட வடிக்கை எடுக்கப்படவில்லை.
நாளை செப்டம்பர் 1 முதல் உணவங்காடி நிலையங்களில் இவ்விதி அமல்படுத்தப்படும். அதன்படி நாளை முதல் விதி மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். இது மூன்றுமாத நினை வூட்டுக் காலத்துக்குப் பின் நடப்புக்கு வரவிருக்கிறது.
உணவு நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் இவ்விதி இவ்வாண்டு இறுதிக்குள் அமலாக்கம் காணும் என்று மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதை நடைமுறையாக்கிக்கொள்ள மக்களுக்கு உதவ, முதலில் இரண்டு மாத கால நினைவூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நவம்பர் 1லிருந்து டிசம்பர் 31வரை தட்டுகளை உரிய இடத்தில் வைப்பதற்கும் மேசையைச் சுத்தம் செய்வதற்கும் வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டப்படும்.
நினைவூட்டியும் அவ்வாறு செய்ய மறுப்போரின் விவரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு எழுத்துபூர்வமான எச்ச ரிக்கை விடுக்கப்படும். அதையும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
இந்த அமலாக்க நடவடிக்கை உணவங்காடிகளிலும் காப்பிக் கடைகளிலும் உணவருந்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
சுயமாக உணவு வாங்கி மேசைக்குத் தூக்கி வர முடியாத பலவீனமான மூத்தோர் மீதும் சிறுவர்கள் மீதும் நடவடிகை எடுக்கப்படாது என்று தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் கூறின.
மே மாத அறிவிப்பையடுத்து தட்டுகளை உரிய இடத்தில் வைப்போரின் விகிதம் 30லிருந்து 65க்கு உயர்ந்துள்ளது.
சாப்பாட்டுத் தட்டுகளை ஒப்படைக்கக் கூடுதல் வசதி
களாக தள்ளுவண்டிகளும் அறிமுகம் காணும்.
அவற்றை இடுக்குகளில் நிறுத்தி வைக்கக்கூடும். இது மக்கள் தாங்கள் பயன்படுத்திய தட்டுகளைத் தூக்கிக்கொண்டு நடக்கவேண்டிய தூரத்தைக் குறைக்க உதவும்.
இதனை அடுத்து உணவங்காடிகளில் தற்போது உள்ள 900 இடங்களுக்கு மேல், தட்டுகளை வைக்க புதிய 150 நிரந்தர இடங்கள் உருவாக்கப்படும்.
காப்பிக்கடைகளிலும் உணவு நிலையங்களிலும் பயன்படுத்திய இந்நடவடிக்கைகளால் துப்புரவுப் பணிகளுக்கான செலவு இதனால் குறையாதென்று தேசிய சுற்றுப் புற வாரியம் குறிப்பிட்டது.
துப்புரவாளர்கள் கிருமிநாசினியால் மேசையைத் துடைக்கும் பணி தொடரும் என்றும் அது தெரிவித்தது.
சுயசேவையின் வழி துப்புரவுப் பணியாளர்களின் பற்றாக்குறையைக் குறித்தும் காலப்போக்கில் அதற்கான செலவைக் குறைப்பது குறித்தும் மக்கள் தங்கள் பங்கையாற்றலாம்.

