ஓட்டுநர்களின் விநியோக சேவை அனுமதி 2022 செப். வரை நீட்டிப்பு

ஓட்டுநர்களின் விநியோக சேவை அனுமதி 2022 செப். வரை நீட்டிப்பு

2 mins read
58c2830f-6068-460e-969a-ae346a459e1f
-

முன்­னோ­டித் திட்­ட­மாக சென்ற ஆண்டு மார்ச் மாதம் டாக்சி ஒட்டு­நர்­க­ளுக்­கும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளுக்­கும் உணவு, மளிகைப் பொருள் விநி­யோக அனு­மதி வழங்­கப்­பட்­டது. இந்த அனு­மதி அடுத்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இதனை நேற்று அறி­வித்த போக்குவரத்து மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர், நோய்த்­தொற்­றால் ஓட்­டு­நர்­க­ளின் வரு­வாய் பாதிப்­ப­டைந்­துள்­ள­தா­க­வும் இவ்­வ­னு­மதி ஓட்­டு­நர்­க­ளுக்­குக் கூடு­தல் வரு­வாயை ஈட்­டித் தரு­ம் என்­றும் குறிப்­பிட்­டார்.

தற்­போ­தைய விதி­மு­றை­க­ளின் கீழ், டாக்சி ஒட்­டு­நர்­க­ளுக்­கும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளுக்­கும் இதுபோன்ற விநி­யோக சேவை வழங்­கும் அனு­ம­தி­யில்லை.

உணவு, மளி­கைப் பொருள்­களில் விநி­யோக சேவை­யின் தேவை அதி­க­ரித்­தி­ருக்­கும் சூழ­லில், இந்த அனு­ம­தி­யால் வாடிக்­கை­யா­ளர்­களும் கடைக்­கா­ரர்­களும் பய­ன­டை­கின்­ற­னர் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

இந்த முன்­னோ­டித் திட்­டத்­தின் துவக்­கத்­தி­லி­ருந்து ஏறத்­தாழ 17,500 டாக்சி ஓட்­டு­நர்­களும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளும் விநி­யோக சேவை வழிங்­கியுள்ளனர். என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

விநி­யோக ஊழி­யர்­க­ளுக்­கான வேலைப் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வது குறித்து மனி­த­வள அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தாக நேற்று முன்தினம் பிர­த­மர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரை­யில் குறிப்­பிட்­டார். பிர­த­மர் விநி­யோக ஊழி­யர்­க­ளை மட்­டும் குறிப்­பிட்­ட­போ­தி­லும், டாக்சி ஓட்டு­நர்­களும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­களும் அதில் உள்­ள­டங்குவர் என்றும் அவர் கூறி­னார்.

தங்­க­ளது முத்­த­ரப்பு பங்­கா­ளி­களுடன் டாக்சி ஒட்டு­நர்­க­ள் மற்றும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளுடைய நல­னின் மேம்­பாடு குறித்து தாங்­கள் தொடர்ந்து பணி­யாற்­று­வ­தாக போக்குவரத்து மூத்த துணை அமைச்­சர் திருவாட்டி ஏமி கோர் கூறி­னார்.