தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தை மீறிய மாணவிக்குச் சிறை

லண்­ட­னில் பட்­டக் கல்வி பயின்­று­கொண்­டி­ருந்த 24 வயது எஸ்­டர் டான் லிங் யிங், சென்ற ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி படிப்பை முடிக்­கா­மல் சிங்­கப்­பூர் திரும்­பி­னார்.

பிரிட்­டனை விட்டு கிளம்­பு­வ­தற்கு முன்பே சளிக்காய்ச்­சலுக்கான அவ­ருக்கு அறி­கு­றி­கள் ஏற்­பட்டு, ருசிக்­கும் முக­ரும் ஆற்­றல்­களையும் அவர் இழந்­தார்.

ஆனால் அவர் மருத்­துவ­ரைக் காணா­மல் லண்­ட­னி­லி­ருந்து கிளம்­பும் வரை தம்­மைத் தாமை தனிமை படுத்­திக்­கொண்­டார்.

சிங்­கப்­பூரை வந்­த­டைந்­த­போது அப்­பெண்­ணி­டம் உடனே வீடு திரும்­பும்­படி கூறப்­பட்டு வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ர­வும் விதிக்­கப்­பட்­டது.

இருப்­பி­னும், அவர் தம் பெற்­றோ­ரு­டன் விமான நிலை­யத்­தில் உள்ள உண­வங்­கா­டி­யில் உணவு உண்­டார். பின்­னர் எம்­ஆர்டி வழி வீட்­டிற்கு அரு­கி­லுள்ள மருந்­த­கத்­துக்­குச் சென்­றார்.

மேலும் தாம் ஜன­வரி மாதமே சிங்­கப்­பூர் திரும்­பி­ய­தா­க­வும் சமீ­ப காலத்­தில் வெளி­நாட்­டி­லி­ருந்து திரும்­ப­வில்லை என்­றும் மருத்­து­வ­ரி­டம் பொய் கூறி மருந்­து­களை வாங்­கி­னார்.

டானிற்கு மார்ச் 30ஆம் தேதி நோய்த்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

வழக்கு விசா­ர­ணை­யின்­போது தமக்கு விதிக்­கப்­பட்ட வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ரவு தெளி­வாக இல்லை என்­றும் தமக்கு நோய்த்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­கக் கூடும் என்று தாம் நினைக்­க­வில்லை என்­றும் டான் கூறி­னார். நோய்த்­தொற்றுத் தடுப்புச் சட்­டத்­தின் கீழ் அவ­ருக்கு 12 வார சிறை தண்­டனை விதிக்கப்கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!