கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி மாணவர் கடந்த வாரம் தமது குடும்பத்தைப் பலமுறை சந்தித்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஜூலை 19ஆம் தேதி முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த 16 வயது இளைஞனுக்கு முன்னதாக தொலைபேசி மூலம் குடும்பத்தினருடன் பேசும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
போலிஸ் கேண்டோன்மண்ட் காம்பிளெக்சில் அந்தச் சிறுவனைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கான தேவை இருக்காது என்று துணை தலைமைச் சட்ட அதிகாரி கேத்தி சூ, நீதிமன்றத்திடம் தெரிவித்தார். அவர் சாங்கி சிறை வளாகத்திற்கு அனுப்பப்படுவார். அந்த இளையரை திரு சுனில் சுதீசன் பிரதிநிதிக்கிறார்.
ஜூலை 20ஆம் தேதியன்று பள்ளிக் கழிவறையில் 13 வயது சிறுவனைக் கொலை செய்திருப்பதாக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் காலை 11.16 மணிக்கும் 11.44 மணிக்கும் இடையே நடந்தது.
கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இளையர் 2019ஆம் ஆண்டில் சொந்த உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதற்காக தேசிய மனநலக் கழகத்தில் பரிசோதிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

