புதிதாக 156 பேருக்குக் கிருமித்தொற்று

புதிதாக 156 பேருக்குக் கிருமித்தொற்று

1 mins read
8b933fed-d177-4333-a772-e31723fb4fff
-

சிங்கப்பூரில் புதிதாக 156 பேருக்கு சமூகத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்களில் 48 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். மேலும் 29 பேர், சோதனையின்மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 79 பேருக்கு, வேறு நோயாளிகளுடன் தொடர்பு இருப்பதாக அறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பாதிக்கப்பட்டவர்களில் இருவர், 70 வயதுக்கும் அதிகமான முதியோர். இவர்கள் கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர்.

வெளிநாடுகளில் நோய்வாய்ப்பட்ட ஐவர் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் ஆக மொத்தம் இன்று 161 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் இந்நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 67,620க்கு உயர்ந்துள்ளது. மேல் விவரங்களை சுகாதார அமைச்சு இன்று வெளியிடும்.