சிங்கப்பூரின் இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரின் இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது.

1 mins read
ed08bf0d-a1f9-47d2-bb4f-3a97e142d23d
-

கொவிட்-19 தடுப்பூசியின் பக்க விளைவுகளை இளநீர் தணிக்கும் என்று சிலர் நம்புவது இதற்குக் காரணம் என ஊகிக்கப்படுகிறது. ஜூன் மாதத்தைக் காட்டிலும் ஜூலையின்போது 'சையாம் கொக்கோநட்' நிறுவனம், தனது விற்பனையை 140 விழுக்காடு அதிகரித்துள்ளது

"எங்களது இளநீரை வாங்குவதற்கு சில்லறை விற்பனைக் கடைகள் காத்திருக்கின்றன. இளநீரைக் கொண்ட பானங்களைத் தயாரிப்பதற்கும் தடுப்பூசி போடக் காத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு நண்பர்களுக்கும் விநியோகம் செய்ய கடைக்காரர்கள் காத்திருக்கின்றனர்," என்று சையாம் கொக்கநாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு கெல்வின் தெரிவித்தார்.

'புரொவெனன்ஸ் டிஸ்ட்ரிபியூஷன்ஸ்' நிறுவனம் தனது இளநீரை இரண்டு மடங்காக கோல் ஸ்டாரெஷ், பேர்பிரைஸ் மற்றும் ரெட்மார்ட்டுக்கு விநியோகம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இப்போது அதிகம் செய்கிறது.

நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான கெவின் டான், ஏப்ரல் மாதம் முதல் விற்பனைகள் படிப்படியாக அதிகரித்ததாகவும் ஜூலை மாத விற்பனை, ஜூன் மாத விற்பனையைக் காட்டிலும் 60 விழுக்காடு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆயினும், காய்ச்சல் மற்றும் உடல்வலியைக் குறைக்க இளநீர் உதவுவதாக எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.