‘பூஸ்டர்’ தடுப்பூசி: சிலருக்கு வேறு தடுப்பூசி போடப்படலாம்

சிங்கப்பூரில் கொவிட்-19 ‘பூஸ்டர்’ தடுப்பூசி நடவடிக்கை தொடங்கும்போது, சிலருக்கு முன்னர் போடப்பட்ட தடுப்பூசியே போடப்படலாம்; மற்றவர்களுக்கு வேறு தடுப்பூசி போடப்படலாம்.

“இரு அணுகுமுறைகளும் அவற்றின் நன்மை தீமைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன,” என்று தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தின் உயர்நிலை தனிமைப்படுத்தும் பிரிவின் இயக்குநரும் இணைப் பேராசிரியருமான லிம் போ லியான் தெரிவித்துள்ளார்.

“இப்போதைய, எதிர்கால கிருமித் திரிபுகளுக்கு எதிராகப் பாதுகாப்பதில் எது செயல்திறன்மிக்கது என்பது ஆராயப்பட வேண்டும்.

“வெவ்வேறு வயதுப் பிரிவினர்க்கு எது பாதுகாப்பானது என்பதையும் ஆராய வேண்டியுள்ளது. வயதானவர்களுக்கு நன்மை பயப்பதாக இருப்பது இளையர்களிடத்தில் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால், இது எல்லா வயதுப் பிரிவினர்க்கும் பொருந்தும் ஒரே பரிந்துரையாக இருக்காது.
“இத்தகைய தரவுகளைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, அறிக்கை அளிக்க மிகுந்த காலம் தேவைப்படும்,” என்று சொன்னார் கொவிட்-19 தடுப்பூசி வல்லுநர் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் லிம்.

சினோவேக் போன்ற வீரியம் அழிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள், ஃபைசர், மொடர்னா போன்ற ‘எம்ஆர்என்ஏ’ தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது பயனளிக்கலாம் என்பது வல்லுநர்கள் சிலரது கருத்து.

“வீரியம் அழிக்கப்பட்ட தடுப்பூசிகள் போதிய அளவில் நுண்ணுயிர்களைக் கொல்லும் ‘டி-செல்’ களை உருவாக்காது. அத்தகைய தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோர், நோயெதிர்ப்புப்பொருள்கள் (ஆன்டிபாடி) என்ற ஓரடுக்குத் தற்காப்பையே பெரும்பாலும் சார்ந்து இருப்பர்,” என்றார் டியூக்- என்யுஎஸ் மருத்துவக் கழகப் பேராசிரியர் ஊய் எங் இயோங்.

சினோவேக் அல்லது சினோஃபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கு பூஸ்டர் தடுப்பூசியாக எம்ஆர்என்ஏ தடுப்பூசியைப் போடுவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருப்பதை சோ சுவீ ஹாக் பொதுச் சுகாதாரக் கழகத்தின் உலக சுகாதார, தொற்றுநோய்த் தடுப்புத் திட்டத்தின் துணைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான சு லீ யாங் கூறினார்.

வெவ்வேறு நாடுகளும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டு வரும் நிலையில், இறுதி முடிவெப்பதற்குமுன் மிகுந்த தரவுகள் தேவைப்படுவதை மருத்துவ வல்லுநர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதனிடையே, எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டதற்கு, அதுகுறித்து இப்போதே கூற இயலாது என்றார் மருத்துவ நுண்ணுயிரியல், தொற்றுக்கான ஆசிய பசிபிக் சமுதாயத்தின் தலைவர் பேராசிரியர் பால் தம்பையா.
“இன்ஃபுளுவன்சா கிருமியைக் காட்டிலும் கொவிட்-19 கிருமியின் உருமாற்ற விகிதம் மிகக் குறைவு என்பதால் ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை,” என்றார் அவர்.

இருப்பினும், கல்லீரல் அழற்சி (ஹெப்படைடஸ் பி) அல்லது தட்டம்மை நோய்க்கு மூன்று தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதுபோல, கொரோனா தொற்றுக்கும் மூன்று தடுப்பூசிகள் போட வேண்டியிருக்கலாம் என்றும் பேராசிரியர் பால் தம்பையா சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!