'பூஸ்டர்' தடுப்பூசி: சிலருக்கு வேறு தடுப்பூசி போடப்படலாம்

'பூஸ்டர்' தடுப்பூசி: சிலருக்கு வேறு தடுப்பூசி போடப்படலாம்

2 mins read
4385785a-a194-4721-a818-42f391287076
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 'பூஸ்­டர்' தடுப்­பூசி நட­வ­டிக்கை தொடங்­கும்­போது, சில­ருக்கு முன்­னர் போடப்­பட்ட தடுப்­பூ­சியே போடப்­ப­ட­லாம்; மற்­ற­வர்­க­ளுக்கு வேறு தடுப்­பூசி போடப்­ப­ட­லாம்.

"இரு அணு­கு­மு­றை­களும் அவற்­றின் நன்மை தீமை­களும் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றன," என்று தேசிய தொற்­று­நோய்த் தடுப்பு நிலை­யத்­தின் உயர்­நிலை தனி­மைப்­ப­டுத்­தும் பிரி­வின் இயக்­கு­நரும் இணைப் பேரா­சி­ரி­ய­ரு­மான லிம் போ லியான் தெரி­வித்­துள்­ளார்.

"இப்­போ­தைய, எதிர்­கால கிரு­மித் திரி­பு­க­ளுக்கு எதி­ரா­கப் பாது­காப்­ப­தில் எது செயல்­தி­றன்­மிக்­கது என்­பது ஆரா­யப்­பட வேண்­டும்.

"வெவ்­வேறு வய­துப் பிரி­வினர்க்கு எது பாது­காப்­பா­னது என்­ப­தை­யும் ஆராய வேண்­டி­யுள்­ளது. வய­தா­ன­வர்­க­ளுக்கு நன்மை பயப்­ப­தாக இருப்­பது இளை­யர்­களி­டத்­தில் அதிக பக்க விளை­வு­களை ஏற்­ப­டுத்­த­லாம். அத­னால், இது எல்லா வய­துப் பிரி­வி­னர்க்­கும் பொருந்­தும் ஒரே பரிந்­து­ரை­யாக இருக்­காது.

"இத்­த­கைய தர­வு­க­ளைச் சேக­ரித்து, பகுப்­பாய்வு செய்து, அறிக்கை அளிக்க மிகுந்த காலம் தேவைப்­படும்," என்று சொன்­னார் கொவிட்-19 தடுப்­பூசி வல்­லு­நர் குழு­வின் உறுப்­பி­ன­ரு­மான பேரா­சி­ரி­யர் லிம்.

சினோ­வேக் போன்ற வீரி­யம் அழிக்­கப்­பட்ட தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­ட­வர்­கள், ஃபைசர், மொடர்னா போன்ற 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்­வது பய­ன­ளிக்­க­லாம் என்­பது வல்லு­நர்­கள் சில­ரது கருத்து.

"வீரி­யம் அழிக்­கப்­பட்ட தடுப்­பூசி­கள் போதிய அள­வில் நுண்­ணு­யிர்­க­ளைக் கொல்­லும் 'டி-செல்' களை உரு­வாக்­காது. அத்­த­கைய தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­டோர், நோயெ­திர்ப்­புப்­பொருள்­கள் (ஆன்­டி­பாடி) என்ற ஓர­டுக்­குத் தற்­காப்­பையே பெரும்­பா­லும் சார்ந்து இருப்­பர்," என்­றார் டியூக்- என்­யு­எஸ் மருத்­து­வக் கழ­கப் பேரா­சி­ரி­யர் ஊய் எங் இயோங்.

சினோ­வேக் அல்­லது சினோ­ஃபார்ம் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர்க்கு பூஸ்­டர் தடுப்­பூ­சி­யாக எம்­ஆர்­என்ஏ தடுப்­பூ­சி­யைப் போடு­வது குறித்து சீனா பரி­சீ­லித்து வரு­வ­தாக தக­வல் வெளி­யாகி இருப்­பதை சோ சுவீ ஹாக் பொதுச் சுகா­தா­ரக் கழ­கத்­தின் உலக சுகா­தார, தொற்­று­நோய்த் தடுப்­புத் திட்­டத்­தின் துணைத் தலை­வ­ரும் இணைப் பேரா­சி­ரி­ய­ரு­மான சு லீ யாங் கூறி­னார்.

வெவ்­வேறு நாடு­களும் வெவ்­வேறு அணு­கு­மு­றை­க­ளைக் கையாண்டு வரும் நிலை­யில், இறுதி முடி­வெப்­ப­தற்­கு­முன் மிகுந்த தர­வு­கள் தேவைப்­ப­டு­வதை மருத்­துவ வல்­லு­நர்­கள் ஒப்­புக்­கொண்­ட­னர்.

இத­னி­டையே, எவ்­வ­ளவு காலத்­திற்கு ஒரு­முறை கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று கேட்­ட­தற்கு, அது­கு­றித்து இப்­போதே கூற இய­லாது என்­றார் மருத்­துவ நுண்­ணு­யி­ரி­யல், தொற்­றுக்­கான ஆசிய பசி­பிக் சமு­தா­யத்­தின் தலை­வர் பேரா­சி­ரி­யர் பால் தம்­பையா.

"இன்­ஃபு­ளு­வன்சா கிரு­மி­யைக் காட்­டி­லும் கொவிட்-19 கிரு­மி­யின் உரு­மாற்ற விகி­தம் மிகக் குறைவு என்­ப­தால் ஆண்­டு­தோ­றும் கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­குப் பெரும்­பா­லும் வாய்ப்­பில்லை," என்­றார் அவர்.

இருப்­பி­னும், கல்­லீ­ரல் அழற்சி (ஹெப்­ப­டை­டஸ் பி) அல்­லது தட்­டம்மை நோய்க்கு மூன்று தடுப்­பூசி­கள் போட்­டுக்­கொள்­வ­து­போல, கொரோனா தொற்­றுக்­கும் மூன்று தடுப்­பூ­சி­கள் போட வேண்­டி­யி­ருக்­க­லாம் என்­றும் பேரா­சி­ரி­யர் பால் தம்­பையா சொன்­னார்.