பெரும்பாலான சூழல்களில் முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிந்து வேலை செய்ய அனுமதி

பெரும்பாலான சூழல்களில் முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிந்து வேலை செய்ய அனுமதி

2 mins read
c5b1397c-2e80-4b84-af2e-f79c7622ab05
-

வரும் நவம்­பர் மாதத்­தில் இருந்து, விருப்­ப­முள்ள தாதி­யர் பெரும்­பாலான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சூழல்­களில் தலை­யங்கி அணிந்­து­கொண்டு வேலை செய்­ய­லாம்.

ஆனா­லும், கணிக்க முடி­யாத வகை­யில் நோயா­ளி­கள் நடந்­து­கொள்­வது போன்ற, தாதி­ய­ரின் பாது­காப்­பிற்கு ஆபத்­தான சூழல்­களில் அவர்­கள் தலை­யங்கி அணிய அனு­மதி மறுக்­கப்­ப­ட­லாம்.

தலை­யங்கி அணி­வது தொடர்­பில் 'அபா­யத்தை விளைவிக்கும் அணு­கு­முறை' குறித்து வழி­காட்டி நெறி­மு­றை­கள் இருப்­ப­தா­க­வும் தாதி­ய­ரின் பாது­காப்பை உறு­தி­செய்­யும் பொருட்டு பல்­வேறு நிபு­ணர்­களு­டன் கலந்­தா­லோ­சித்த பின்­னர் அவை வகுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

பெரும்­பா­லான சுகா­தா­ரப் பரா­மரிப்­புச் சூழல்­களில், நோயா­ளி­கள்­மீது படாத வகை­யில் தாதி­யர் தங்­க­ளது பணிச்­சீ­ரு­டை­யு­டன் சேர்த்து தலை­யங்கி அணியலாம் என்று சுகா­தார அமைச்சு சொன்­ன­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறு­கிறது.

ஆயி­னும், அறுவை சிகிச்­சைக் கூடங்­கள் போன்ற நோய்த்­தொற்­றுக் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக உள்ள இடங்­களில், ஒரு­முறை மட்­டும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய தலை­யங்கியை அவர்­கள் அணிந்­து­கொள்­ள­லாம் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

"தலை­யங்­கியை இழுப்­பது போன்று கணிக்க முடி­யாத விதத்­தில் நோயா­ளி­கள் நடந்­து­கொண்டு, தாதி­ய­ரின் பாது­காப்­பிற்கு ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டிய சூழல்­களில் தலை­யங்கி அணிய அனு­மதி மறுக்­கப்­ப­ட­லாம்," என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தமது தேசிய தினப் பேரணி உரை­யின்­போது, பணி­யி­டங்­களில் முஸ்­லிம் தாதி­யர் தலை­யங்கி அணிய அனு­மதிக்­கும் அர­சாங்­கத்­தின் முடிவை பிர­த­மர் லீ சியன் லூங் அறி­வித்­தார்.

அத­னைத் தொடர்ந்து, திருத்­தப்­பட்ட கொள்கை 7,000க்கு மேற்­பட்ட ஊழி­யர்­க­ளுக்­குப் பொருந்­தும் என்­றும் வழி­காட்டி நெறி­மு­றை­களின் அடிப்­ப­டை­யில் உடுப்பு விதி மாற்றியமைக்கப்படும் என்­றும் அமைச்சு தெரிவித்தது.

தலை­யங்கி அணி­வது தொடர்­பில் மருத்­துவ, நடை­முறை வழி­காட்­டு­தல்­களும் அமல்­ப­டுத்­தப்­படும்.

தொற்­று­நோ­யி­யல் நிபு­ணர்­க­ளு­டன் ஆலோ­சித்து, மருத்­துவ வழி­காட்­டு­தல்­கள் உரு­வாக்­கப்­பட்­டன. நுண்­ணிய மருத்­து­வச் செயல்­முறை­கள் பாது­காப்­பாக மேற்­கொள்­ளப்­ப­டு­வதை இந்த வழி­காட்­டு­தல் உறு­திப்­ப­டுத்­தும்.

எந்த வண்­ணத்­தில் தலை­யங்கி அணி­ய­லாம், சீரு­டைப் பணி­யா­ளர்­கள் ஒரே மாதிரி காட்­சி­ய­ளிக்­கும் வகை­யில் தலை­யங்­கியை எவ்­வாறு அணிய வேண்­டும் போன்­ற­வற்றை நடை­முறை வழி­காட்­டு­தல்­கள் தெளிவு­ப­டுத்­தும்.

இங்­குள்ள பொதுச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் இந்த வழி­காட்­டு­தல்­கள் குறித்த விவ­ரங்­களைத் தங்­க­ளின் ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கும் என்று அமைச்சு கூறி­யது. ஆனால், எப்­போது அந்த விவ­ரங்­கள் வழங்­கப்­படும் என்­பது தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.