தொடர்பில்லாத வகையில் 79 பேர்க்குக் கிருமித்தொற்று

1 mins read
4a1d9394-b1f1-4f1a-9936-d93454c81fe7
-

சமூ­கத்­தில் புதி­தாக 156 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அவர்­களில் 48 பேர் முன்­னர் கிருமி தொற்­றி­யோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் என்­றும் அவர்­கள் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­ட­னர் என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

தொடர்­பி­ருந்த வகை­யில் 29 பேரை கொரோனா தொற்­றி­யது கண்­கா­ணிப்­புப் பரி­சோ­த­னை­கள் மூலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­டோ­ரில் எஞ்­சிய 79 பேர்க்கும் எந்­த­வொரு கிரு­மித் தொற்­றுக் குழு­மத்­து­ட­னும் தொடர்­பி­ருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

வெளி­நாட்­டில் இருந்து வந்த ஐவ­ரைக் கிருமி தொற்­றி­யி­ருப்­ப­தும் உறு­தியானது. மொத்­தத்­தில், நேற்று புதி­தாக 161 புதிய பாதிப்பு­கள் பதி­வா­யின.

இரு புதிய தொற்றுக்குழுமங்கள்

முன்­ன­தாக, தெம்­ப­னிஸ் பேருந்­துச் சந்­திப்பு நிலை­யம், மன­ந­லக் கழ­கம் என மேலும் இரு புதிய கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வாகி இருப்­ப­தாக அமைச்சு அறி­வித்­தது.

நேற்று முன்தின நிலவரப்படி, தெம்பனிஸ் பேருந்துச் சந்திப்பு நிலையக் குழுமத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் சேர்த்து, இப்போது எட்டுப் பேருந்துச் சந்திப்பு நிலையங்கள் கிருமித்தொற்றுக் குழுமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மன­ந­லக் கழ­கத் தொற்­றுக் குழு­மத்­தில் அறு­வர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அடுத்தடுத்து இருக்கும் இரு உள்நோயாளிப் பிரிவுகளைச் சேர்ந்த தாதி ஒருவர், சுகாதார உதவியாளர் ஒருவர், நோயாளிகள் நால்வர் அவர்களில் அடங்குவர்.

பணி­யா­ளர்­கள் இரு­வ­ரும் நோயா­ளி­களில் ஒரு­வ­ரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டு­விட்­ட­னர். மற்ற மூன்று நோயாளிகளும் இன்னும் தடுப்பூசி போடவில்லை.

ஒட்­டு­மொத்­தத்­தில், சிங்­கப்­பூரில் இது­வரை 67,620 பேரைக் கிருமி தொற்­றி­விட்­டது;