விதிமீறியதாகக் குற்றச்சாட்டு

விதிமீறியதாகக் குற்றச்சாட்டு

1 mins read
a75067f8-1adf-45d7-99b5-3880628a0f78
-
Google News Preferred Icon

நிறுவனம் ஒன்றின் இரவு விருந்தின்போது தனது வளாகத்தில் 65 பேர் ஒன்று கூட அனுமதித்து, கொவிட்-19 விதிகளை மீறிவிட்டதாக 'டர்ஃப் சிட்டி'யில் அமைந்து இருக்கும் 'ஆ யாட் அபலோன் ரெஸ்டாரன்ட் ஹோல்டிங்ஸ்' உணவகத்தின் மீது இன்று குற்றம் சாட்டப்பட இருக்கிறது. 200 டர்ஃப் கிளப் சாலை என்ற முகவரியில் செயல்படும் அந்த உணவகத்தின்மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் நில ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. 'ஏஷியா பைலிங்' என்ற நிறுவனம், பிப்ரவரி 6ஆம் தேதி அவ்விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதை அடுத்து, அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் முறை விதிமீறியோர்க்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள்வரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.