கெத்தே சினிமா வர்த்தகப் பிரிவை $84.8 மில்லியனுக்கு விற்க ஒப்பந்தம்

1 mins read
4c163d11-d1e3-4bf7-9660-6e41bd8c73b1
கெத்தே அமைப்பின் எட்டு திரையரங்குகளை 2017ல் 'எம்எம்ஏஷியா' நிறுவனம் வாங்கியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'கெத்தே' குறி­யீட்­டுச் சின்­னத்­தின் கீழ் இயங்கி வரும் திரை­ய­ரங்­கு­களை 'எம்­எம்2 ஏஷியா' நிறு­வ­னம், $84.8 மில்­லி­ய­னுக்கு 'கிங்ஸ்­மீட் பிராப்­பர்­டிஸ்' எனும் உள்­ளூர் முத­லீட்டு நிறு­வ­னத்­தி­டம் விற்க ஒப்­பந்­தம் செய்­துள்­ளது. இருப்­பி­னும் இந்த விற்­பனை, கொள்­மு­தல் ஒப்­பந்­தத்­திற்­குப் பங்­கு­தா­ரர்­க­ளின் ஒப்­பு­தல் தேவைப்­படும்.

கொவிட்-19 நெருக்­க­டி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள 'எம்­எம்2 ஏஷியா', இத்­த­கைய ஒப்­பந்­தத்­தின் மூலம் தன் நிதி நிலை­மையை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும் என்று அதன் நிறு­வனர் மெல்­வின் ஆங் கூறி­னார். நவம்­பர் 2017ல், நிறு­வ­னம் கெத்தே அமைப்­பின் எட்டு திரை­ய­ரங்­கு­களை­யும் $230 மில்­லி­ய­னுக்கு வாங்­கி­யது.