குடியிருப்பாளர் கட்டமைப்புக் குழுக்களின் 20 தொண்டூழியர்களும் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் தலைமைச் செயலாளர் டாக்டர் வில்லியம் வானும், செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி போ லி சானுடன் சேர்ந்து நேற்று 'கனிவன்புடனும் பாதுகாப்புடனும் செயல்படுங்கள்' எனும் வாசகத்தைக் கொண்ட 'நைலோன்' கயிற்றுப் பைகளை நடைபாதைகளையும் அடையாளம் காணப்பட்டுள்ள அதிக நடமாட்டம் உள்ள 16 இடங்களையும் பயன்படுத்தும் சைக்கிளோட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் வழங்கினார்கள். அந்தப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கும் இந்தக் கனிவன்புச் செய்தியைப் பரப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
'கனிவன்புடனும் பாதுகாப்புடனும் செயல்படுங்கள்' இயக்கம்
1 mins read
படத்தில் திருவாட்டி போ லி சான் (இடமிருந்து 2வது) சைக்கிளோட்டி ஒருவருக்கு கனிவன்பு வாசகம் கொண்ட பையை வழங்குகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -