செப்டம்பர் 13ஆம் தேதியன்று நாடாளுமன்றக் கூட்டம்
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் இம்மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குக் கூடும் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று அறிவித்தார்.
நாய்கள் பராமரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்குச் சிறை, அபராதம்
தனது செல்லப் பிராணிகள் பராமரிப்பு நிறுவனத்திடம் விடப் பட்ட நாய்களை முறையாகக் கவனிக்காத குற்றத்துக் காக 'பிளேட்டினம் டாக்ஸ் கிளப்' எனும் செல்லப் பிராணிகள் விடுதியின் உரிமையாளருக்கு நேற்று இரண்டு வாரச் சிறை, $35,700 அபராதம்
ஆகியவை தண்டனையாக விதிக்கப்பட்டது.
திருவாட்டி ஷாலட் லியூ எனும் 33 வயது உரிமையாளர் மீது நாய்கள் பராமரிப்பு முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்யத் தவறியது, அதிகாரிகளிடம் பொய் யான தகவலைத் தெரிவித்தது, நீதியை நிலைநாட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைக்கு இடையூறாக இருந்தது, தனது வர்த்தகத்தை தனது சகோதரியின் பெயரிலும் பொய்யான முகவரியில் பதிவு செய்தது ஆகிய குற்றச்சாட்டு களையும் லியூ ஒப்புக்கொண்டார். தனது நிறுவனத்தின் பராமரிப்பில் விடப்பட்ட நாய்களை முறையாகக் கவனிக்கத் தவறியது உட்பட மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டன.
செல்லப் பிராணி தொடர்பான வர்த்தக நடவடிக்கை களில் ஈடுபட அவருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. அவரது பராமரிப்பில் விடப்பட்ட பல நாய்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அவற்றில் இரண்டு நாய்கள் மரணம் அடைந்தன.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்து போலிஸ் தேசிய சேவையாளர் மரணம்
சிங்கப்பூர் போலிஸ் படையின் சிறப்புச் செயல்பாட்டுத் தளபத்தியத்தின் முழுநேர போலிஸ் தேசிய சேவையாளர் ஒருவர் நேற்று முன்தினம் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 21 வயது ஆடவர் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்குத் தனது பணியைத் தொடங்கும்போது, ஆயுதக் காப்பகத்திலிருந்து தனது சேவைத் துப்பாக்கியைப் பெற்றுள்ளார் என்று போலிஸ் படை நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் கூறியது.
"சிறப்புச் செயல்பாட்டுத் தளபத்தியத்தின் கழிவறையில் காலை சுமார் 11 மணியளவில் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் அந்த ஆடவர் தனியாகக் கிடந்தார். அவருக்குப் பக்கத்தில் அவரது சேவைத் துப்பாக்கி இருந்தது," என்று போலிஸ் தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் மருத்துவ அதிகாரிகள் அவரது மரணத்தை காலை 11.20 மணிக்கு உறுதிப்படுத்தினர். இச்சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலிஸ் வகைப்படுத்தியுள்ளது, குற்றவியல் புலனாய்வுப் பிரிவு இதன் விசாரணையை நடத்துகிறது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, இந்த மரணத்தில் சூது ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாண்ட அச்சேவையாளரின் குடும்பத்துக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட போலிஸ், அவர் குடும்பத்துக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறது.
வேலைகள், வெளிநாட்டு ஊழியரணி பற்றி பேச சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மனு
வேலைகள், வெளிநாட்டு ஊழியரணிக் கொள்கை ஆகியவை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தனியார் உறுப்பினர் தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது என்று அக்கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியோங் மன் வாய் நேற்று தெரிவித்தார்.
அந்தத் தீர்மானத்துக்கான விவாதம் இம்மாதம் 13ஆம் தேதி அல்லது 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்று திரு லியோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். சிங்கப்பூரர்களின் வேலைகளையும் வாழ்வாதாரத் தையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதே அந்த விவா தத்தில் முக்கியமாக இடம்பெறும் என்று குறிப்பிட்ட திரு லியோங், பிரதமர் லீ தமது தேசிய தினப் பேரணி உரையில் வெளிநாட்டினருக்கான வேலை அனுமதி அட்டைதாரர் களின் கவலைகள் பற்றி பேசினாரே தவிர, அந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்ன வழிகள் என்று எடுத்து உரைக்கவில்லை என்றார்.

