இணையம் வழி மலர்ந்த 'சிங்கப்பூர் நினைவுகள்'

இணையம் வழி மலர்ந்த 'சிங்கப்பூர் நினைவுகள்'

2 mins read
c3ce978c-31c9-45a6-bb2c-13ddf3c66e40
'சிங்கப்பூர் நினைவுகள்' நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களில் சிலர். படம்: சிங்கப்பூர் புத்தாக்க இந்திய கலையகம் -
Google News Preferred Icon

சிங்கப்பூரின் 56வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் சிங்கப்பூர் புத்தாக்க இந்திய கலையகம் 'சிங்கப்பூர் நினைவுகள்' என்ற முப்பரிமாண மெய்நிகர் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 9ஆம் தேதி சமூக ஊடகம் வழி அரங்கேற்றியது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அமைப்பின் உறுப்பினர்களின் நாட்டுப்பற்று உறுதியுடன், 'சிங்கப்பூர் என்று' எனும் கவிஞரேறு அமலதாசன் இயற்றிய பாடல், சி. குணசேகரனின் குரலில் ஒலித்தது.

அதனைத் தொடர்ந்து, மூத்த ஊடகத் தயாரிப்பாளர் திரு இஎஸ்ஜே சந்திரனின் இணைய நேர்காணல் இடம்பெற்றது. 1959ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை யிலான தனது சிங்கப்பூர் நினைவுகளை அவர் பதிவு செய்தார்.

அடுத்து இடம்பெற்ற நேர் காணலில் டாக்டர் குமரன் ராசப்பன் தடுப்பூசி போடுவதன் இன்றியமையாமை, முக்கியமாக முதியோர் அதனை போட்டுக் கொள்வதன் அவசியம் போன்ற அம்சங்கள் பற்றி விளக்கினார்.

மூத்த கலைஞர்கள் சித்ராதேவி, முத்துலட்சுமி படைத்த "நம்பு நம்புவதை நம்பு" எனும் நகைச்சுவை அங்கம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. தொடர்ந்து, டிஎம்எஸ் குணா, திலா லட்சுமணன், வீணா சுப்ரமணியம், அமுதா ஆகிய புகழ்பெற்ற மலேசியக் கலைஞர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் பாடல்களையும் பாடினர்.

உள்ளூர் கலைஞர்களான சங்கர் ராஜன், கலையரசி, குணசெல்வம், ரமேஷ், சுவப்னாஸ்ரீ, மைக்கல்சாமி, முகமது அலி ஆகியோர் தங்கள் சிங்கப்பூர் நினைவுகளைப் பதிவு செய்தனர். அமைப்பின் உறுப்பினர்கள் அமராவதி, மீனாட்சி சபா பதி, விஜயா மோகன், லட்சுமி சந் திரன், ஜனனி, கீர்த்தனா, ராஜா சுவாமிநாதன் சிங்கப்பூரர்களாக இருப்பதன் பெருமையை விளக்கினர். சி. குணசேகரன் மின்னாக்கத் தளக் கட்டமைப்புடன் நிகழ்ச்சியை வழி நடத்தினார். இதன் இணைய ஒளிபரப்பைக் காண https://youtu.be/zTe2ChbHCz0