'ஹலால்' கோழி மீது ஆஸ்திரேலிய பன்றித் தோல் என்று தவறாக முத்திரை இட்டதற்காக 'ஜயன்ட்' பேரங்காடி மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து முஸ்லிம் இனத்து இணையவாசி ஒருவர், சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். அதையடுத்து, 'ஜயன்ட்' கிளை ஒன்றில் இத்தவறு நேர்ந்துள்ளது என்று நிறுவனத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
இதுபோன்ற சம்பவங்கள் கடுமையாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பேரங்காடியில் உள்ள அனைத்து பொருட்களும் நன்கு சோதனை இடப்படும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு 'ஹலால்' முத்திரை கொண்ட பொருட்களுக்குத் தவறான முத்திரை இடப்படும் சம்பவம் நடப்பது, முதல் முறை அல்ல. கடந்த மாதம் 'என்டியுசி ஃபேர்பிரைஸ்' பேரங்காடியும், இதேபோல் கோழி மீது பன்றி என்ற தவறான முத்திரையை அதன் கிளை ஒன்று இட்டதற்காக ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

