ஒட்டுமொத்த விற்பனைக்கு இன்டர்நேஷனல் பிளாசா

ஒட்டுமொத்த விற்பனைக்கு இன்டர்நேஷனல் பிளாசா

1 mins read
9863b524-e983-45c2-9274-82e1800e5045
தஞ்ஜோங் பகாரில் அமைந்துள்ள 'இன்­டர்­நேஷனல் பிளாசா'. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தஞ்­சோங் பகா­ரில் உள்ள 'இன்­டர்­நே­ஷ­னல் பிளாசா' ஒட்­டு­மொத்த விற்­ப­னைத் திட்­டத்­தின் கீழ் விற்­பனைக்கு வந்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய ஒருங்­கி­ணைந்த கட்­ட­ட­மான 'இன்­டர்­நேஷ­னல் பிளாசா'வை ஜூலை ஏழாம் தேதி 80 விழுக்­காட்­டிற்கு மேற்­பட்ட பங்­கு­தா­ரர்­கள் விற்க முடி­வெ­டுத்­த­னர்.

இதன்­படி குறைந்­த­பட்­சத் தொகை­யான $2.7 பில்­லி­ய­னுக்­குப் பொது ஏலக்­குத்­தகை மூலம் வாங்க விரும்­பு­வோர் தங்­க­ளது விருப்­பத்­தைத் தெரி­விக்­க­லாம்.

ஒட்­டு­மொத்த விற்­ப­னைத் திட்­டத்­தின் கீழ் வரும் ஆக பெரிய விற்­ப­னை­யா­கும்.

1970ல் கட்­டப்­பட்ட 'இன்­டர்­நே­ஷ­னல் பிளாசா'வில் 209 குடி­யி­ருப்­பு­களும் 559 அலு­வ­லங்­களும் 192 கடை­களும் ஒரு வாகன நிறுத்­து­மி­ட­மும் ஒரு நீச்­சல் குள­மும் உள்­ளன. வர்த்­தக பயன்­பாட்­டுக்கு ஒதுக்­கப்­பட்ட 'இன்­டர்­நே­ஷ­னல் பிளாசா' 0.7 ஹெக்­டர் நிலப்­ப­ரப்­பைக் கொண்­டுள்­ளது. இதன் குத்­த­கைக் காலத்­தில் இன்­னும் 48 ஆண்­டு­கள் எஞ்­சி­யுள்­ளன. ஒட்­டு­மொத்த விற்­ப­னைக்­கான தொடக்­கப் பணி­ 2019ஆம் ஆண்டு தொடங்­கி­ய­ போதும் கொள்­ளை­நோய் பர­வல் கார­ண­மா­கத் தள்­ளிப்­போ­டப்­பட்­டது.

இத­னால் 'இன்­டர்­நேஷ­னல் பிளாசா' சட்ட அமைச்­சி­ட­மி­ரு­ந்து விற்­ப­னைக் காலத்­துக்கு நீட்­டிப்பு பெற்­றது.

ஒப்­பந்­தப்­புள்­ளி­யைச் சமர்ப்­பிக்க வேண்­டிய இறுதி நாள் நவம்­பர் 30ஆம் தேதி மதி­யம் மூன்று மணி.