பெரியவர்கள், கொள்ளைநோயால் ஏற்பட்டுள்ள சவால்களை திறம்பட சமாளித்துள்ளனர். வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கமாகிவிட்ட சூழ்நிலையில் வருமானத்தைப் பெருக்க மின்னிலக்க வர்த்தகங்களைத் தொடங்குவது, புதிய உடற் பயிற்சி நடைமுறைகளை உருவாக்குவது போன்ற புத்தாக்க வழிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டினர் உள்ளிட்ட சமூக ஆதரவு அவர்களது நல்வாழ்வுக்கு முக்கிய மாகும்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் வெற்றிகரமாக மூப்படையும் ஆய்வு நிலையத்தின் அறிக்கை இதனை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு முதியவர்கள் நல்வாழ்வு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளிலிருந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. மேலும் 56 முதல் 75 வயது வரையிலான 35 பேர் பங்கேற்ற ஏழு குழுக்களை அடிப்படையாகக் கொண்ட புதிய கண்டுபிடிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் நிைலமையை எப்படி பெரியவர்கள் சமாளித்தார்கள் என்பதைக் கண்டறிவதும் முந்தைய ஆய்வில் அடையாளம் காணப்பட்ட போக்குகளுக்கு ஏற்ற சூழலை வழங்குவதும் குழுக்களின் நோக்கமாகும்.
உதாரணமாக, கொள்ளைநோய் காரணமாக நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகாலப் பராமரிப்பில் இடையூறுகள் ஏற்பட்டன.
ஆனால் அவர்களுடைய உடல்நிலை திருப்திகரமாகவே இருந்ததை முந்தைய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
வீட்டிலிருந்து வேலை செய் வதால் வேலை-வாழ்க்கைக்கு இடையே சமநிலை அதிகரித்தது. இதனால் சில வயதானவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையிலும் வழக்கமான உடற்பயிற்சி களிலும் ஈடுபட முடிந்தது.
இதன் காரணமாக அவர்களுடைய சுகாதாரமும் மேம்பட்டது.
வீட்டிலிருந்து வேலைகளை முடிப்பதால் அன்றாட உடற் பயிற்சியில் ஈடுபட முடிந்தது என்றும் அது நீரிழிவு நோயின் பாதிப்பை குறைத்தது என்றும் பங்கேற்பாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். "தொற்றுநோயால் எதிர் மறையான விளைவுகள் ஏற்படும் என்று நாம் நினைத்தாலும் வெற்றி கரமாக மூப்படைவதற்கான சமூ கத்தை வடிவமைக்கும் முக்கியப் பாடங்களையும் அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள முடியும்," என்று ஆய்வாளர்கள் அறிக்கையில் தெரி வித்துள்ளனர். ஒத்த வயதுடைய குழுக்களின் சமூக ஆதரவும் முக்கியம் என்பது மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு ஆகும்.