10 முக்கிய துறைகளில் வேலை கிடைக்க உதவி

2 mins read
ab983738-f065-4e54-ba90-b9762712fd45
-

சிங்­கப்­பூர் அதன் பொரு­ளி­யலை மறு­சீ­ர­மைத்து வரும் நிலை­யில், பத்து முக்­கிய துறை­களில் பணி

­பு­ரிய விரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் புதிய பணிக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தக­வல்­தொ­டர்பு தொழில்­நுட்­பம் மற்­றும் ஊட­கம், நிதிச் சேவை­கள், கணக்­கி­யல், உற்­பத்தி, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, மொத்த வியா­பா­ரம், தள­வா­டம், உண­வுச் சேவை­கள், சில்­லறை வர்த்­த­கம், சுற்­றுப்­பு­றத் திட்­ட­மி­டல் ஆகிய துறை­களில் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வேலை கிடைக்க உத­விக்­க­ரம் நீட்­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எட்டு உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட பணிக்­கு­ழு­வுக்கு மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தலைமை தாங்­கு­கி­றார்.

மூன்று பிரி­வு­களில் பணிக்­குழு கவ­னம் செலுத்­தும் என்­றார் அவர்.

இந்த 10 முக்­கிய துறை­க­ளுக்கு மாற விரும்­பும் சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு அளிப்­பது, இத்­து­றை­களில் ஏற்­கெ­னவே பணி­பு­ரிந்து வரும் ஊழி­யர்­கள் தங்­கள் திறன்­களை மேம்­ப­டுத்த உத­வு­வது, மேம்­ப­டுத்­தப்­பட்ட மனி­த­வள அணுகு­மு­றை­களை ஊக்­கு­விப்­பது ஆகி­ய­வற்­றுக்­குப் பணிக்­குழு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கும்.

தொழில்­து­றை­யும் ஊழி­ய­ரணி உரு­மாற்­ற­மும் நெருங்­கிய தொடர்­பு­டை­யவை என்று வர்த்­தக, தொழில் இரண்­டாம் அமைச்­ச­ரு­மான டாக்­டர் டான் கூறி­னார்.

நிறு­வ­னங்­கள் உரு­மா­றி­வ­ரும் நிலை­யில், செயல்­மு­றை­களும் திறன்­களும் மேம்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­றார் அவர்.

தொழில்­து­றைக்கு ஏற்ப ஊழி­ய­ர­ணி­யும் மாற வேண்­டும் என்று அமைச்­சர் டான் வலி­யு­றுத்­தி­னார்.

இந்­தப் பத்து முக்­கிய துறை­களில் சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்ள பல்­வேறு அமைப்­பு­க­ளு­டன் பணிக்­குழு இணைந்து செயல்­படும்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கொண்ட வலு­வான ஊழி­ய­ரணி உறுதி செய்­யப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தத் திட்­டம் நிறை­வேற மனி­த­வள அமைச்சு, வர்த்­தக, தொழில் அமைச்சு, தொடர்பு, தக­வல் அமைச்சு, சுகா­தார அமைச்சு, கல்வி அமைச்சு, சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் ஆகி­யவை ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டு­கின்­றன.

தொழிற்­சங்­கங்­கள், முத­லா­ளி­கள் போன்ற முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­க­ளு­டன் இவை ஒன்­றி­ணைந்து செயல்­படும்.

பத்து முக்­கிய துறை­களில் இருப்­பில் உள்ள வேலை­க­ளைப் பற்றி சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்­குப் புரிய வைக்க பணிக்­குழு இலக்கு கொண்­டுள்­ள­தாக டாக்­டர் டான் தெரி­வித்­தார்.

இந்த வேலை­களில் சேர தேவை­யான திறன்­க­ளைப் பற்றி சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள் தெரிந்­து­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

பொருளியல் உருமாற்றத்தில் சிங்கப்பூர் முழுவீச்சுடன் செயல்பட்டு வரும் நிலையில், வேலை கிடைப்பதில் சிலருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.

புதிய வேலைகளுக்குத் தேவையான திறன்கள் இல்லாத காரணத்தால் வேலை கிடைப்பதில் சிலருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதைச் சரிசெய்ய பணிக்குழு வழிவகைகளைக் கண்டுபிடிக்கும் என்று அமைச்சர் டான் உறுதி அளித்தார்.