உதவி தேவைப்படுவோர் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க குடியிருப்பாளர்களுக்கு 'ஒன்சர்வீஸ்' செயலியில் புதிய அம்சம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு, தங்க இடம் இல்லாது பொது இடங்களில் படுத்துத் தூங்குபவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு உதவி செய்ய குடியிருப்பாளர்கள் இந்தப் புதிய அம்சத்தைப் பயன்படுத்தி உதவி நாடலாம்.
இந்தப் புதிய அம்சத்தைப் பயன்படுத்தும்போது உதவி தேவைப்படும் இடத்துக்கு அதி
காரிகள் நேரில் செல்வார்கள். இதன்மூலம் மிக விரைவாக உதவி சென்றடையும்.
'ஹெல்ப் நெய்பர்' என்று அழைக்கப்படும் இந்தப் புதிய அம்சம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று நகராட்சி சேவைகள் அலுவலகத்தாலும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சாலும் ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்புக்கான முகவையாலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்போதுக்கு எளிதில் பாதிப்படையக்கூடிய முதியவர்கள், தங்க இடம் இல்லாமல் பொது இடங்களில் படுத்துத் தூங்குபவர்கள், அட்டைப் பெட்டிகளைச் சேகரிப்
பவர்கள், மெல்லிழைத் தாட்களை விற்பவர்கள் ஆகியோருக்கு உதவி வழங்குவதில் கவனம் செலுத்தப்படும்.
கடந்த மாதம் நிலவரப்படி உதவி தேவைப்படுவோர் தொடர்பாக 58 பதிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 60 விழுக்காடு பதிவுகள் பற்றி அமைப்புகள் ஏற்கெனவே தெரியும்.
எஞ்சிய பதிவுகள் புதியவை. அவை குறித்து அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டதாக நகராட்சி சேவைகள் அலுவலகத்துக்குத் தலைமை தாங்கும் திருவாட்டி சிம் ஆன் நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
ஒருவருக்கு உதவி தேவை என்று குடியிருப்பாளர்கள் கருதினால் அவர்களிடம் முதலில் பேசி உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யும்போது அவர்
களது தனியுரிமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சருமான திருவாட்டி சிம் ஆன் பல ஆண்டு களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
மூதாட்டி ஒருவர் வழிதெரியாமல் தவித்துகொண்டிருந்ததாகவும் பசியில் வாடியதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி வலம் வந்தன. அறிமுகமில்லாதவர்கள் கொடுத்த உணவை அவர் சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த மூதாட்டி தமது தொகுதி வாசிகளில் ஒருவர் என்று திருவாட்டி சிம் ஆன் தெரிவித்தார். அவருக்கு உதவி வழங்க அதி
காரிகள் பலமுறை முன்வந்தும் அவற்றை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகத் திருவாட்டி சிம் ஆன் கூறினார்.
ஆனால் நாளடைவில் அந்த மூதாட்டியின் உடல்நலம் குன்றியதாக அவர் தெரிவித்தார்.
பல அமைப்புகள் ஒன்றிணைந்து அந்த மூதாட்டியிடம் பேசி உதவி
களையும் மருத்துவ சேவையையும் ஏற்க வைத்தனர். அவருக்குத் தேவையான நீண்டகாலப் பராமரிப்புத் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
"மக்கள்தொகை வேகமாக மூப்படைவதால் தனியாக வசிக்கும் மூத்தோரையும் குடும்ப ஆதரவு அவ்வளவு இல்லாத மூத்தோரையும் கண்காணிக்க கூடுதல் உதவி தேவை. உதவி தேவைப்
படுவோர் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் எளிய முறை நடப்பில் இருந்தால் நல்லது.
"ஒருவருக்கு உதவி தேவை என்று குடியிருப்பாளர்கள் கருதினால் அவர்களது அடையாளம் சமூக வலைத்தளங்களில் கசியாமல் அவர்களைப் பற்றி சமூக சேவை அமைப்புகளுக்குத் தெரிவிக்க புதிய அம்சம் வகை செய்கிறது," என்று திருவாட்டி சிம் ஆன் தெரிவித்தார்.

