உதவி தேவைப்படுவோர் பற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்க புதிய, எளிய முறை அறிமுகம்

உதவி தேவைப்படுவோர் பற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்க புதிய, எளிய முறை அறிமுகம்

2 mins read
545ee3d3-ee40-42f8-a9ac-442a8e6e45ff
2022ஆம் ஆண்டின் பிற்பாதியில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, வீடு வாங்குவோரிடையே கட்டுப்படியாகும் வீட்டு விலை தொடர்பான கவலை அதிகரித்து வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உதவி தேவைப்­ப­டு­வோர் குறித்து அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­விக்க குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு 'ஒன்­சர்­வீஸ்' செய­லி­யில் புதிய அம்­சம் ஒன்று சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

உதா­ர­ணத்­துக்கு, தங்க இடம் இல்­லாது பொது இடங்­களில் படுத்­துத் தூங்­கு­ப­வர்­க­ளைப் பார்த்­தால் அவர்­க­ளுக்கு உதவி செய்­ய குடி­யி­ருப்­பா­ளர்­கள் இந்­தப் புதிய அம்­சத்­தைப் பயன்­ப­டுத்தி உதவி நாட­லாம்.

இந்­தப் புதிய அம்­சத்­தைப் பயன்­ப­டுத்­தும்­போது உதவி தேவைப்­படும் இடத்­துக்கு அதி­

கா­ரி­கள் நேரில் செல்­வார்­கள். இதன்­மூ­லம் மிக விரை­வாக உதவி சென்­ற­டை­யும்.

'ஹெல்ப் நெய்பர்' என்று அழைக்­கப்­படும் இந்­தப் புதிய அம்­சம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி­யன்று நக­ராட்சி சேவை­கள் அலு­வ­ல­கத்­தா­லும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சா­லும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பரா­ம­ரிப்­புக்­கான முக­வை­யா­லும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இப்­போ­துக்கு எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய முதி­ய­வர்­கள், தங்க இடம் இல்­லா­மல் பொது இடங்­களில் படுத்­துத் தூங்­கு­ப­வர்­கள், அட்­டைப் பெட்­டி­க­ளைச் சேக­ரிப்­

ப­வர்­கள், மெல்லிழைத் தாட்­களை விற்­ப­வர்­கள் ஆகி­யோ­ருக்கு உதவி வழங்­கு­வ­தில் கவ­னம் செலுத்­தப்­படும்.

கடந்த மாதம் நில­வ­ரப்­படி உதவி தேவைப்­ப­டு­வோர் தொடர்­பாக 58 பதி­வு­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. அவற்­றில் 60 விழுக்­காடு பதி­வு­கள் பற்றி அமைப்­பு­கள் ஏற்­கெ­னவே தெரி­யும்.

எஞ்­சிய பதி­வு­கள் புதி­யவை. அவை குறித்து அமைப்­பு­க­ளுக்கு தெரி­விக்­கப்­பட்­ட­தாக நக­ராட்சி சேவை­கள் அலு­வ­ல­கத்­துக்­குத் தலை­மை ­தாங்­கும் திரு­வாட்டி சிம் ஆன் நேற்று ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

ஒரு­வ­ருக்கு உதவி தேவை என்று குடி­யி­ருப்­பா­ளர்­கள் கரு­தி­னால் அவர்­க­ளி­டம் முத­லில் பேசி உறுதி செய்ய வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வாறு செய்­யும்போது அவர்­

க­ளது தனி­யு­ரி­மைக்கு மரி­யாதை கொடுக்க வேண்­டும் என்று குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு நினை­வூட்­டப்­ப­டு­கிறது.

வெளி­யு­றவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­ச­ரு­மான திரு­வாட்டி சிம் ஆன் பல ஆண்டு­ க­ளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்­ப­வத்­தைப் பற்றி தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பகிர்ந்­து­கொண்­டார்.

மூதாட்டி ஒரு­வர் வழி­தெ­ரி­யா­மல் தவித்­து­கொண்­டி­ருந்­த­தா­க­வும் பசி­யில் வாடி­ய­தா­க­வும் சமூக ஊட­கங்­களில் செய்தி வலம் வந்­தன. அறி­மு­க­மில்­லா­த­வர்­கள் கொடுத்த உணவை அவர் சாப்­பிட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­த மூதாட்டி தமது தொகு­தி ­வா­சி­களில் ஒரு­வர் என்று திரு­வாட்டி சிம் ஆன் தெரி­வித்­தார். அவ­ருக்கு உதவி வழங்க அதி­

கா­ரி­கள் பல­முறை முன்­வந்­தும் அவற்றை அவர் ஏற்க மறுத்­து­விட்­ட­தா­கத் திரு­வாட்டி சிம் ஆன் கூறி­னார்.

ஆனால் நாள­டை­வில் அந்த மூதாட்டியின் உடல்­ந­லம் குன்­றி­ய­தாக அவர் தெரி­வித்­தார்.

பல அமைப்­பு­கள் ஒன்­றி­ணைந்து அந்த மூதாட்­டி­யி­டம் பேசி உத­வி­

க­ளை­யும் மருத்­துவ சேவை­யை­யும் ஏற்க வைத்­த­னர். அவ­ருக்­குத் தேவை­யான நீண்­ட­கா­லப் பரா­ம­ரிப்­புத் திட்­டத்­துக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

"மக்­கள்­தொகை வேக­மாக மூப்­ப­டை­வ­தால் தனி­யாக வசிக்­கும் மூத்­தோ­ரை­யும் குடும்ப ஆத­ரவு அவ்­வ­ளவு இல்­லாத மூத்­தோ­ரை­யும் கண்­கா­ணிக்க கூடு­தல் உதவி தேவை. உதவி தேவைப்­

ப­டு­வோர் குறித்து அதி­கா­ரி­க­ளுக்­குத் தெரி­விக்­கும் எளிய முறை நடப்­பில் இருந்­தால் நல்­லது.

"ஒரு­வ­ருக்கு உதவி தேவை என்று குடி­யி­ருப்­பா­ளர்­கள் கரு­தி­னால் அவர்­க­ளது அடை­யா­ளம் சமூக வலைத்­த­ளங்­களில் கசி­யா­மல் அவர்­க­ளைப் பற்றி சமூ­க சேவை அமைப்­பு­க­ளுக்­குத் தெரி­விக்க புதிய அம்­சம் வகை செய்­கிறது," என்று திரு­வாட்டி சிம் ஆன் தெரி­வித்­தார்.