மின்னிலக்க நிதிச் சேவைகளுக்கு ஆதரவுக்கரம்

2 mins read
aa5eb8e7-cfb8-483d-ade2-2a67e94aa1cf
-

ஆசி­யா­வில் மின்­னி­லக்க நிதிச் சேவை­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யத் தேவை­யான திறன்­களை மேம்­ப­டுத்த ஆய்­வுக் கழ­கம் ஒன்று முக்­கிய பங்­க­ளிக்­கும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார்.

மின்­னி­லக்க நிதிச் சேவை தொடர்­பான திறன்­கள், அனு­வம் கொண்­டோ­ருக்­கான தேவை அதி­க­ரித்­தி­ருப்­பதை அவர் சுட்­டி­னார். சவால்­களை எதிர்­கொள்ள ஃபின்டெக் துறைக்கு ஆய்­வுக் கழ­கம் உத­வும் என்­றார் அவர்.

நேற்று சிங்­கப்­பூர் தேசிய பல்­

க­லைக்­க­ழ­கத்­தின் கென்ட் ரிட்ஜ் வளா­கத்­தில் ஆசி­யான் மின்­னி­லக்க நிதிக் கழ­கத்­தின் திறப்பு விழா நடை­பெற்­றது. அதில் துணைப் பிர­த­மர் ஹெங் கலந்து­ கொண்டு உரை­யாற்­றி­னார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், தேசிய ஆய்வு அற­நி­று­வ­னம் ஆகி­யவை இணைந்து ஆய்­வுக் கழ­கத்தை அமைத்­துள்­ளன. முது­கலை, முனை­வர் பட்­டக் கல்­வித் திட்­டங்­களை வழங்க 20 முன்­னணி வங்­கி­கள், ஃபின்டெக் மற்­றும் பெரிய தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் முத­லி­ய­வற்­று­டன் கழ­கம் இணைந்து செயல்­ப­டு­வ­தாக திரு ஹெங் கூறி­னார். மற்ற துறை­களில் பட்­டம் பெற்­றுள்­ள­வர்­கள், கழ­கம் வழங்­கும் இந்­த முது­கலை, முனை­வர் பட்­டக் கல்­வித் திட்­டங்­களில் சேர்ந்து பயி­ல­லாம் என்று திரு ஹெங் தெரி­வித்­தார்.

கழ­கத்­தின் பிர­தான கல்­வித் திட்­ட­மான மின்­னி­லக்க நிதித் தொழில்­நுட்ப முது­க­லைப் பட்­டக் கல்வி திட்­டத்­தில் 52 பேர் இணைந்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் தேசிய பல்கலைக்­க­ழ­கத்­தின் தலை­வர் டான் எங் சாய் தெரி­வித்­தார். மின்­னி­லக்க நிதித் தொழில்­நுட்ப முனை­வர் பட்­டக் கல்­வி­யில் ஐவர் சேர்ந்­துள்­ள­னர்.

வலு­வான தொழில்­நுட்­பத்

திற­னு­ட­னும் சுய­மாக ஆய்வு செய்­யும் திற­னு­ட­னும் செயல்­ப­டக்­

கூ­டிய உயர்­தர பட்­ட­தா­ரி­களை உரு­வாக்­கு­வதே திட்­டத்­தின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டது.