கொவிட்-19 தடுப்பூசி: சான்றிதழ்கள் சரிபார்ப்பு கட்டாயம்

கொவிட்-19 தடுப்பூசி: சான்றிதழ்கள் சரிபார்ப்பு கட்டாயம்

1 mins read
0f8af147-2c12-4cbb-8ea2-216fce961493
-

மலேசியாவிற்குள் செல்பவர்கள், குடிமக்கள் உள்பட, கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுகொண்டதற்கான சான்றிதழ்களை அங்குள்ள அதிகாரிகள் சரிபார்க்கச் சமர்ப்பிக்கவேண்டும் என்று அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்திற்கான அமைச்சர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

"சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசியர்கள், தங்களுக்கு அருகலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்திற்குச் சென்று வெளிநாடுகளில் தடுப்பூசி முழுமையாகப் போடப்பட்டுள்ளதைத் தெரிவிக்கவேண்டும்," என்றார் டாக்டர் ஆதாம். மாவட்ட அலுவலகங்கள் இந்தத் தகவலை மாநில சுகாதாரத் துறையிடம் தெரிவிக்கும் என்று அவர் கூறினார்.

இதன் பிறகு மலேசியாவின் அவசரகால தயாரிப்பு மற்றும் பதில் நடவடிக்கை நிலையம், மைசெஜாத்தெரா செயலி வழி மலேசிய சான்றிதழ் வழங்கப்படும் என்று டாக்டர் ஆதாம் கூறினார். இந்த முறை மலேசியர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டினருக்கும் கட்டாயமாக உள்ளது.