சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான பற்றுச்சீட்டு விண்ணப்பங்களின் மதிப்பு 178 மில்லியன் வெள்ளி

சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான பற்றுச்சீட்டு விண்ணப்பங்களின் மதிப்பு 178 மில்லியன் வெள்ளி

1 mins read
eeb3efc9-215c-4187-b947-3f89614990fe
-

கடந்த புதன்கிழமை பதிவான புள்ளி விவரங்களின்படி, பெரியவர்களான சுமார் 1.2 மில்லியன் சிங்கப்பூரர்கள் 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்' எனப்படும் சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான பற்றுச்சீட்டுகளை ஒரு முறையாவது பயன்படுத்தியிருப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.

சுமார் 1.5 மில்லியன் பரிவர்த்தனைகள் பதிவாகியிருப்பதாகவும் கழகம் சொன்னது. பரிவர்த்தனைகளின் மதிப்பு சுமார் 178 மில்லியன் வெள்ளி என்று கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது.

சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான பற்றுச்சீட்டுத் திட்டம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. கொவிட்-19 சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுப்பயணத் துறைக்கு உதவும் நோக்குடள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 18 வயதைத் தாண்டிய சிங்கப்பூரர்கள் அனைவரும் இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் 100 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தவேண்டும். ஹோட்டல்கள், சுற்றுலாப் பயணங்கள் உள்ளிட்டவற்றுக்கு பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம். ஐந்து இணையத்தளங்களில் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். 'சாங்கி ரெக்கமெண்ட்ஸ்', 'குளோபல்டிக்ஸ்', 'ட்ரேவலோக்கா', 'ட்ரிப்டாட்காம்', 'குளூக்' ஆகியவை அவை. அதிகமானோர் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க, சென்ற மாதம் இரண்டாம் தேதியிலிருந்து 'குளூக்', 'யுஓபி ட்ராவல் பிளேனர்ஸ்' ஆகிய இரண்டும் அவற்றைப் பெற்றுக்கொள்வோருக்கு சுமார் 40,000 வெள்ளி மதிப்புள்ள தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் பற்றுச்சீட்டுகளை வழங்கிவருகின்றன.