உள்ளூரில் புதிதாக 186 கொவிட் கிருமித்தொற்று சம்பவங்கள்

1 mins read
d1a6a0b2-c06b-42ce-84ed-3ac3ae49c2ff
-

சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி புதிதாக 186 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 90 பேர், இதற்கு முன் தொற்று ஏற்பட்டோருடன் தொடர்பு இல்லாதவர்கள். 63 பேர் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டனர். தொற்று ஏற்பட்டோருடன் தொடர்பிருந்த மேலும் 33 பேர், கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டனர்.

கிருமித்தொற்று ஏற்பட்ட நால்வர் 70 வயதைத் தாண்டியவர்கள். ஒரு முறை தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட அவர்களுக்கு மோசமான நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இவர்களோடு, வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த ஐவருக்குத் தொற்று ஏற்பட்டது.