விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தும் இயந்திர மனிதன்

விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தும் இயந்திர மனிதன்

2 mins read
f7264c36-f479-49e1-a4c9-cad1220c6ee3
தோ பாயோ சென்ட்ரல் பகுதியில் நேற்று வலம் வந்தது 'சேவியர்' எனப் பெயர் சூட்டப்பட்ட இயந்திர மனிதன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொதுமக்கள் விதிமுறைகளை மீறாமல் பார்த்துக்கொள்ளும் தானியக்க இயந்திர மனிதர்கள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இவை, தோ பாயோ சென்ட்ரல் பகுதியில் மூன்று வாரங்களுக்குச் சோதனையிடப்படும்.

சட்­ட­வி­ரோ­த­மாக உண­வங்­காடிக் கடை­களை நடத்­து­வோர், தவ­றான இடங்­களில் புகை­பி­டிப்­போர், நடை­பா­தை­களில் மோட்­டார்­சைக்­கி­க­ளையோ மின்ஸ்­கூட்­டர்­களையோ ஓட்­டு­வோர், விதிக்­கப்­பட்­ட­தற்கு மேல் அதி­க­மான எண்­ணிக்­கை­யில் ஒன்­று­கூ­டு­வோர் உள்­ளிட்­டோரை இரண்டு இயந்­திர மனி­தர்­கள் அடை­யா­ளம் காணும்.

எல்லா திசை­க­ளி­லும் பட­மெ­டுக்­கக்­கூ­டிய கேம­ராக்­கள் இயந்திர மனி­தர்­களில் பொறுத்­தப்­பட்­டுள்­ளன. அவற்­றால் இருட்­டி­லும் பட­மெடுக்­க­மு­டி­யும். விதி­மு­றை­களை மீறா­மல் இருக்­கு­மாறு மக்­க­ளுக்கு எடுத்­துச்­சொல்­லும் குறிப்­பு­க­ளை­யும் இது காட்­டும்.

அதிக ஆள் நட­மாட்­டம் உள்ள பொது இடங்­களில் தானி­யக்கக் கரு­வி­யைக் கொண்டு கண்­காணிப்பது இதுவே முதல் முறை. பொதுச் சுகா­தா­ரத்­தை­யும் பாதுகாப்­பை­யும் நிலை­நாட்­டு­வது இதன் இலக்கு.

தேசிய சுற்றுப்புற வாரியம், நிலப் போக்குவரத்து ஆணையம், உள்துறை குழுவின் அறிவியல் பிரிவு உள்ளிட்ட ஐந்து அமைப்புகள் இத்திட்டத்தை நடத்துகின்றன. தேசிய தின அணிவகுப்பு போன்ற பெரிய அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் தானியக்க இயந்திர மனிதர்களைப் போல் இவை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சேவி­யர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர மனிதனில் உள்ள கேம­ராக்­களில் பதி­வா­கும் படங்­களும் காணொ­ளி­களும் கட்டுப்பாட்டு நிலை­யம் ஒன்­றுக்கு அனுப்­பப்­படும். அங்கு அதிகா­ரி­க­ளால் பல இயந்திர மனி­தர்­களை ஒரே நேரத்­தில் கண்­கா­ணிக்­க­மு­டி­யும். தவ­றான செயல்­க­ளைக் கண்­ட­றி­யும் இயந்­திர மனி­த­னின் ஆற்றலைப் பற்­றித் தெரிந்­து­கொண்டு அதில் இருக்­கக்­கூ­டிய குறை­பா­டு­க­ளைச் சரி­செய்ய போது­மான தக­வல்­க­ளைச் சேகரிப்­பதே இந்த மூன்று வாரச் சோத­னை­யின் நோக்­கம்.

சோதனை கட்­டத்­தின்­போது, குறிப்­பாக விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்­தத்­தான் இந்த இயந்­திர மனி­தர்­கள் அதி­கம் பயன்­ப­டுத்­தப்­ப­டுமே தவிர, கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களில் இவை அதி­கம் ஈடு­ப­ட­மாட்டா எனத் தெரி­விக்­கப்­பட்­டது. சேவியர் இயந்திர மனிதர்களால் மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் செல்லமுடியும்.