சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான பற்றுச்சீட்டு விண்ணப்பங்களின் மதிப்பு 178 மில்லியன் வெள்ளி

சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான பற்றுச்சீட்டு விண்ணப்பங்களின் மதிப்பு 178 மில்லியன் வெள்ளி

1 mins read
4981ddff-dbb7-45ef-93a3-8b373fd0aee3
-

கடந்த புதன்­கி­ழமை பதி­வான புள்ளி விவ­ரங்­க­ளின்­படி, பெரி­ய­வர்­க­ளான சுமார் 1.2 சிங்­கப்­பூ­ரர்­கள் 'சிங்­கப்­பூர்­ ரீ­டிஸ்­க­வர்' எனப்­படும் சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­கான பற்­றுச்­சீட்­டு­களை ஒரு முறை­யா­வது பயன்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

சுமார் 1.5 மில்­லி­யன் பரி­வர்த்­தனை­கள் பதி­வா­கி­யி­ருப்­ப­தா­க­வும் கழ­கம் சொன்­னது.

பரிவர்த்தனைகளின் மதிப்பு சுமார் 178 மில்லியன் வெள்ளி என்று கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது.

சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­கான பற்­றுச்­சீட்­டுத் திட்டம் சென்ற ஆண்டு டிசம்­பர் மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

கொவிட்-19 சூழ­லால் ெபரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்ள சுற்­றுப்­ப­ய­ணத் துறைக்கு உத­வும் நோக்­கு­டள் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

18 வய­தைத் தாண்­டிய சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ரும் இவ்­வாண்டு டிசம்­பர் மாதம் 31ஆம் தேதிக்­குள் 100 வெள்ளி மதிப்­புள்ள பற்­றுச்­சீட்டு­க­ளைப் பயன்­ப­டுத்­த­வேண்­டும். ஹோட்டல்­கள், சுற்­றுலாப் பயணங்கள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு பற்றுச்சீட்டுகளைப் பயன்­ப­டுத்தலாம்.

ஐந்து இணை­யத்­த­ளங்­களில் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். 'சாங்கி ரெக்­க­மெண்ட்ஸ்', 'குளோ­பல்­டிக்ஸ்', 'ட்ரே­வ­லோக்கா', 'ட்ரிப்­டாட்­காம்', 'குளூக்' ஆகி­யவை அவை.

அதி­க­மா­னோர் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்ள ஊக்­கு­விக்க, சென்ற மாதம் இரண்­டாம் தேதி­யி­லி­ருந்து 'குளூக்', 'யுஓபி ட்ரா­வல் பிளே­னர்ஸ்' ஆகிய இரண்­டும் அவற்­றைப் பெற்­றுக்­கொள்­வோ­ருக்கு சுமார் 40,000 வெள்ளி மதிப்­புள்ள தேசி­யத் தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ் பற்­றுச்­சீட்­டு­களை வழங்­கி­வ­ரு­கின்­றன.