சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் பாஸ்போர்ட்டுகளை விரைந்து புதுப்பிக்க வேண்டுகோள்

தங்களது பாஸ்போர்ட் காலாவதியாவதற்குக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே அதை புதுப்பிக்க விண்ணப்பிக்கும்படி சிங்கப்பூரில் உள்ள மலேசியர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டிலிருந்து பாஸ்போர்ட்டுகளைப் புதுப்பிக்க தங்களை வந்தடையும் விண்ணப்பங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்தது.

கொவிட்-19 குறித்து சிங்கப்பூரும் மலேசியாவும் அமல்படுத்தியுள்ள எல்லைக் கட்டுப்பாடு நடவடிக்கைகளால் இச்சூழல் எழுந்துள்ளதாக தூதரகம் அறிவித்தது.

2019ல் வழங்கப்பட்ட 24,000 பாஸ்போர்ட்டுகளுடன் ஒப்பிடுகையில், 2020ல் 60,387 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டதாக தூதரகம் தெரிவித்தது. இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை மொத்தம் 69,993 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

அதிகரித்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையைச் சமாளிக்கச் சென்ற ஆண்டு ஜூலையிலிருந்து சேவை வழங்கும் நேரத்தை இரவு ஏழு மணி வரை நீட்டித்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

மேலும், சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து ஜோகூர் குடிநுழைவு துறையில் பாஸ்போர்ட்டுகளை அச்சிடுவதாகவும் இணையம் வழி முன்பதிவு செய்யும் சேவையையும், ‘டிரோப் பாக்ஸ்’ முறையையும் அமல்படுத்தியுள்ளதாகவும் அது தெரிவித்தது.

மேலும், தேவையான ஆவணங்கள் யாவும் சீராக இருக்கையில் தற்போது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய தேவைப்படும் காலம் எட்டு வாரங்கள் என்று அது கூறியது. மலேசியர்கள் தூதரகத்திடமிருந்து அறிவிப்பு வந்தவுடன் பாஸ்போர்ட்டை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

சிங்கப்பூரின் கொவிட்-19 சுகாதார நடவடிக்கைகளின்படி பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிக்கவும், அவற்றை புதுப்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தூதரகம் மலேசியர்களுக்கு நினைவூட்டியது.

இவ்வாண்டின் முன்பகுதியில் தங்களது பாஸ்போர்ட்டுகளைப் புதுப்பிக்க மலேசியர்கள் பலர் காலை ஆறு மணி முதல் தூதரகத்தின் வெளியே காத்திருக்கத் தொடங்கினர். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது குறித்து பலர் வருத்தம் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!