சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் பாஸ்போர்ட்டுகளை விரைந்து புதுப்பிக்க வேண்டுகோள்

2 mins read
2bcdf7a6-d1d5-43f2-8df6-e515d7772343
-

தங்­க­ளது பாஸ்­போர்ட் காலா­வ­தி­யா­வ­தற்­குக் குறைந்­தது ஆறு மாதங்­க­ளுக்கு முன்பே அதை புதுப்­பிக்க விண்­ணப்­பிக்­கும்­படி சிங்­கப்­பூ­ரில் உள்ள மலே­சி­யர்­க­ளுக்கு ஆலோ­சனை கூறப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆண்­டி­லி­ருந்து பாஸ்­போர்ட்­டு­க­ளைப் புதுப்­பிக்க தங்­களை வந்­த­டை­யும் விண்­ணப்­பங்­கள் பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ள­தாக சிங்­கப்­பூ­ரில் உள்ள மலே­சி­யத் தூத­ர­கம் தெரி­வித்­தது.

கொவிட்-19 குறித்து சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் அமல்­ப­டுத்­தி­யுள்ள எல்­லைக் கட்­டுப்­பாடு நட­வடிக்­கை­க­ளால் இச்­சூ­ழல் எழுந்­துள்­ள­தாக தூதரகம் அறி­வித்­தது.

2019ல் வழங்­கப்­பட்ட 24,000 பாஸ்­போர்ட்­டு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், 2020ல் 60,387 பாஸ்­போர்ட்­டு­கள் வழங்­கப்­பட்­ட­தாக தூத­ர­கம் தெரி­வித்­தது. இவ்­வாண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து இது­வரை மொத்­தம் 69,993 பாஸ்­போர்ட்­டு­கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அது நேற்று கூறி­யது.

அதி­க­ரித்­துள்ள விண்­ணப்­பங்­க­ளின் எண்­ணிக்­கை­யைச் சமா­ளிக்­கச் சென்ற ஆண்டு ஜூலை­யி­லி­ருந்து சேவை வழங்­கும் நேரத்தை இரவு ஏழு மணி வரை நீட்­டித்­துள்­ள­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

மேலும், சென்ற ஆண்டு செப்டம்­ப­ரி­லி­ருந்து ஜோகூர் குடி­நு­ழைவு துறை­யில் பாஸ்­போர்ட்­டு­களை அச்­சி­டு­வ­தா­க­வும் இணை­யம் வழி முன்­ப­திவு செய்­யும் சேவை­யை­யும், 'டிரோப் பாக்ஸ்' முறை­யை­யும் அமல் படுத்­தி­யுள்­ள­தா­க­வும் அது தெரி­வித்­தது.

மேலும், தேவை­யான ஆவ­ணங்­கள் யாவும் சீராக இருக்­கை­யில் தற்­போது விண்­ணப்­பங்­க­ளைப் பூர்த்தி செய்யத் தேவைப்­படும் காலம் எட்டு வாரங்­கள் என்று அது கூறி­யது. மலே­சி­யர்­கள் தூத­ர­கத்­தி­ட­மி­ருந்து அறி­விப்பு வந்­த­வு­டன் பாஸ்­போர்ட்டை நேரில் சென்று பெற்­றுக்­கொள்­ள­லாம்.

சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 சுகா­தார நட­வ­டிக்­கை­க­ளின்­படி பாஸ்­போர்ட்­டு­க­ளுக்கு விண்­ணப்­பிக்­க­வும், அவற்றை புதுப்­பிக்­க­வும் பெற்­றுக்­கொள்­ள­வும் கட்­டா­யம் முன்­ப­திவு செய்ய வேண்­டும் என்று தூத­ர­கம் மலே­சி­யர்­க­ளுக்கு நினை­வூட்­டி­யது.

இவ்­வாண்­டின் முன்­ப­கு­தி­யில் தங்­க­ளது பாஸ்­போர்ட்­டு­க­ளைப் புதுப்­பிக்க மலே­சி­யர்­கள் பலர் காலை ஆறு மணி முதல் தூத­ர­கத்தின் வெளியே காத்­தி­ருக்­கத் தொடங்­கி­னர். நீண்ட நேரம் காத்­தி­ருக்க வேண்­டி­ய­து குறித்து பலர் வருத்­தம் தெரி­வித்­த­னர்.