‘எம்எம்எஸ்’ சேவை நிறுத்தப்படவுள்ளது

'வாட்ஸ்அப்', 'டெலிகிராம்' போன்ற செயலிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு 'எம்எம்எஸ்' எனப்படும் மேம்பட்ட குறுந்தகவல்கள் வாயிலாகத்தான் படங்களையும் காணொளிகளையும் பிறரின் கைபேசிகளுக்கு அனுப்பமுடியும். அந்தச் சேவை வரும் நவம்பர் மாதத்திற்குப் பிறகு பயன்பாட்டில் இருக்காது.

நவம்­பர் மாதத்­தின் நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரின் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­கள் 'எம்­எம்­எஸ்' சேவையை வழங்­க­மாட்டா.

இந்­தச் சேவை இல்­லா­மல் போகும்­போது குறுந்­த­க­வல்­க­ளின் மூலம் படங்­கள், இசைப் பதி­வு­கள் உள்­ளிட்­ட­வற்­றைப் பிற­ருக்கு அனுப்­ப­மு­டி­யா­மல் இருக்கும்.

தற்­போது, குறுந்­த­க­வ­லில் இவற்றை அனுப்­பி­னால் அந்­தக் குறுந்­த­க­வல் 'எம்­எம்­எஸ்' தக­வ­லாக மாறிக்­கொள்­ளும்.

இனி சில பழைய கைபே­சி­களிலி­ருந்து உணர்­வுக் குறிப்­பு­களைக் கொண்ட குறுந்­த­க­வல்­களை எளி­தில் அனுப்­ப­மு­டி­யா­மல் போக­லாம்.

இந்­தச் சிக்­கலை எதிர்­நோக்குவோர் உணர்­வுக் குறிப்­பு­களைத் தாங்­களே பதி­வி­ட­வேண்டியிருக்கும். குறுந்­த­க­வல்­கள் 'எம்­எம்­எஸ்' தக­வல்­க­ளாக மாறும் சாத்­தி­யம் அறவே இல்­லா­மல் இருக்­கும்.

சிங்­கப்­பூ­ரில் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­க­ளின் பய­னீட்­டா­ளர்­கள் பொது­வாக ஒரு மாதத்­திற்கு அதிபட்­ச­மாக குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யில் உள்­ளூ­ரில் இருப்­ப­வர்­களுக்­குக் குறுந்­த­க­வல்­களை இல­வ­ச­மாக அனுப்­ப­லாம்.

அந்த எண்­ணிக்­கை­யைத் தாண்டும்­போது ஒவ்­வொரு குறுந்­த­க­வ­லுக்­கும் ஐந்து காசு கட்டணம் செலுத்தவேண்­டும்.

'எம்­எம்­எஸ்' ஒவ்­வொன்றுக்­கும் 30லிருந்து 80 காசு வரை ஆகும்.

'எம்­எம்­எஸ்' சேவைக்­கான தேவை குறைந்து வரு­வ­தால் அதை நிறுத்த முடி­வு­செய்­த­தாக சிங்­கப்­பூ­ரின் முக்­கி­யத் தொலைத் தொடர்பு நிறு­வ­னங்­க­ளான சிங்­டெல், ஸ்டார்­ஹப், எம்1 ஆகி­யவை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­தன.

கடந்த மூவாண்­டு­களில் மட்டுமே இதன் பயன்­பாடு 40 விழுக்­காடு குறைந்­தி­ருப்­ப­தாக எம்1 கூறி­யது. 'எம்­எம்­எஸ்' சேவையை அதி­க­மா­னோர் பயன்­ப­டுத்­தா­த­தால் இதை நிறுத்­து­வது பய­னீட்­டா­ளர்­களிடையே அதி­கத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது எனத் தான் நம்­பு­வதாக ஸ்டார்­ஹப் சொன்­னது.

எனி­னும், குறுந்­த­க­வல்­ சேவை தொடர்ந்து இருக்­கும் என்று மூன்று நிறு­வ­னங்­களும் பய­னீட்­டா­ளர்­களுக்கு உறு­தி­ய­ளித்­தன.

இதனை அனைத்து தொலைத்­தொ­டர்பு கருவி­க­ளி­லும் கட்டமைப்பு ­க­ளி­லும் தொடர்ந்து பயன்­ப­டுத்­த­மு­டி­யும் என்பதை சிங்­டெல் சுட்­டி­யது. மின் வர்த்­த­கம், விளம்­ப­ரக் குறிப்­பு­கள், ஒருமுறை பயன்­ப­டுத்­தப்­படும் கட­வுச்­சொல் உள்­ளிட்ட­வற்றை அனுப்­பக் குறுந்­த­க­வல்­கள் இன்­ன­மும் அதி­க­மாக உப­யோ­கிக்­கப்­ப­டு­வதை அந்­நி­று­வ­னம் குறிப்­பிட்­டது.

2017ஆம் ஆண்டில் 2ஜி கட்­ட­மைப்பின் செயல்பாடு சிங்­கப்­பூ­ரில் முற்­றி­லும் நிறுத்­தப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து பல்­வேறு கைபேசிச் சேவைகள் நிறுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அவற்­றில் ஒன்று 'எம்­எம்­எஸ்'.

'எம்­எம்­எஸ்' சேவைக்­குப் பதி­லாக 'வாட்­ஸ்அப்', 'டெலி­கி­ராம்', 'வீச்­சேட்' போன்ற செய­லி­க­ளைப் பயன்­ப­டுத்­து­மாறு சிங்­டெல், எம்1 இரண்­டும் வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கேட்­டுக்­கொண்டு வரு­கின்­றன.

இத்­த­கைய செய­லி­கள், சமூக வலைத்­த­ளங்­கள் ஆகி­ய­வற்­றின் வாயி­லாக படங்­க­ளை­யும் காணொளி­க­ளை­யும் பய­னீட்­டா­ளர்­கள் சுமு­க­மாக அனுப்­ப­லாம் என்று எம்1 சொன்­னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!