‘காய்கறிகளைத் தொட்டதால் கிருமி பரவியிருக்கலாம்’

புக்­கிட் மேரா வியூ ஈரச்­சந்தை, உண­வங்­கா­டி­யில் கடந்த ஜூன் மாதத்தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டோ­ரி­டையே மூன்று அம்­சங்­கள் காணப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

அவர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை, முகக்­க­வ­சங்­களைச் சரி­யாக அணி­ய­வில்லை, பழங்­க­ளை­யும் காய்­க­றி­க­ளை­யும் கைக­ளால் அதி­கம் தொட்­டுப் பார்த்­தி­ருக்­கின்­ற­னர்.

புக்கிட் மேரா வியூ ஈரச்சந்தை, உணவங்காடியில் உருவான கொவிட்-19 குழுமம் தொடர்பில் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.

இந்தக் குழுமத்தில் மொத்தம் 94 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இங்கிருந்த அனைத்து 182 கடைகளும் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டன. அவ்­வே­ளை­யில் இதுவே சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய கிரு­மித்­தொற்று குழு­ம­மாக இருந்­தது. இத­னைத் தொடர்ந்து அருகிலி­ருந்த சில வீட­மைப்பு புளோக்­கு­களி­லும் சிறிய குழு­மங்­கள் உரு­வா­யின. 200,000க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டையே சுகா­தார அமைச்சு பல முறை கொவிட்-19 பரி­சோ­த­னை­களை நடத்­தி­யது.

ஆய்­வின் ஓர் அங்­க­மாக, கடைக்­கா­ரர்­கள், வாடிக்­கை­யாளர்­கள் உட்­பட புக்­கிட் மேரா வியூ ஈரச்­சந்­தை­யும் உண­வங்­கா­டி­யும் மூடப்­பட்­ட­தால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் ஆய்­வா­ளர்­கள் பேசியதாக தேசிய பொதுச் சுகா­தார, தொற்று­நோ­யி­யல் பிரி­வின் இணைப் பேரா­சி­ரி­யர் மத்­தா­யஸ் டோ கூறி­னார். மூத்­தோர் பலர் இந்­தப் பகு­திக்கு அதி­கம் செல்­வ­துண்டு.

கிரு­மிப் பர­வ­லால் அவர்­கள்­தான் அதி­கம் பாதிக்­கப்­பட்டுள்­ள­னர் என்­ப­தால் புக்­கிட் மேரா வியூ கொவிட்-19 குழு­மத்­தைக் குறி­வைத்து ஆய்வு நடத்­தி­ய­தா­கத் தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தின் நிர்­வாக இயக்கு­ந­ரான பேரா­சி­ரி­யர் லியோ யீ சின் தெரி­வித்­தார்.

புக்­கிட் மேரா வியூ கடைக்­காரர்­கள் உண­வுப் பொருட்­க­ளைப் பொட்ட­ல­மிட்டு விற்­பது குறித்து ஆலோ­சிக்­க­லாம் என்று ஆய்­வில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. வாடிக்­கை­யா­ளர்­கள் கைச் சுத்தி­க­ரிப்­பா­னைக் கொண்டு செல்­ல­லாம்.

பழங்­களையும் காய்­க­றி­களையும் தொடு­வ­தற்கு முன்னும் பின்னும் சுத்­தி­க­ரிப்­பா­னால் கைகளைச் சுத்­தம் செய்­து­கொள்­ள­லாம் என்­றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!