வேலையிடத்தில் பாகுபாடு; நிர்வாகத்துக்கு நெருக்கடி

வேலையிடத்தில் பாகுபாடு; நிர்வாகத்துக்கு நெருக்கடி

1 mins read
d24131e2-6d94-4f8f-8bfa-4d651511b8dc
-

புதிய பாது­கா­வ­லர்­க­ளைப் பணி­யில் அமர்த்­து­வ­தில் பாகு­பாடு காட்­டி­ய கார­ணத்­திற்­காக 'ஹில் வியு' கொண்­டோ­மி­னி­யத்­தின் நிர்­வாக முக­வர் சிங்­கப்­பூர் பாது­கா­வ­லர் சங்­கத்­தின் கவ­னத்­துக்கு வந்­துள்­ளார்.

பாது­கா­வ­லர்­க­ளுக்கு கட்­டா­யம் சீன மொழி தெரிந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் அவர்­கள் 21 வய­திற்கும் 60 வய­திற்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும் என்று 'சாவில்ஸ் பிராப்­பர்ட்டி மேனேஜ்­மண்ட்' நிபந்­த­னை­களைத் தனது ஏலக்­குத்­த­கை­யில் விதித்­தி­ருந்­தது. நிபந்­த­னை­க­ளைச் சந்­திக்­கத் தவ­றும் பாது­கா­வ­லர்­களை வேலைக்கு அனுப்­பி­னால் ஒவ்­வொரு முறை­யும் நிறு­வ­னத்­துக்கு $100 அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும் சில நிபந்­த­னை­க­ளைப் பற்றி சிங்­கப்­பூர் பாது­கா­வ­லர் சங்­கம் கவலை கொண்­டி­ருந்­தா­லும் மேற்­கூ­றப்­பட்­டவை பாகு­பாடு காட்­டாத பாது­கா­வ­லர் நிறு­வ­னங்­க­ளைப் பாதிப்­ப­தாக தெரி­வித்­தது.

இச்­சம்­ப­வம் குறித்து 'டஃபெப்' எனப்படும் நடு­நி­லை­யான வேலை­வாய்ப்பு நடை­மு­றை­கள் மீதான முத்தரப்பு கூட்டணி அமைப்பையும் மனி­த­வள அமைச்­சை­யும் அச்­சங்­கம் அணுக விரும்­பு­வ­தாக கூறி­யது. சென்ற மாதம் நடந்த தேசிய தினப் பேரணி உரை­யில் பிர­த­மர் திரு லீ சியன் லூங் வேலை­யி­டத்­தில் பாகு­பாடு காட்­டு­வது பொறுத்­துக்­கொள்­ளப்­ப­டாது என்று கூறி­யி­ருந்­தார்.