சிறப்புப் பயண ஏற்பாடு: ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்த முதல் விமானம்

சிறப்புப் பயண ஏற்பாடு: ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்த முதல் விமானம்

1 mins read
5256d5c2-1850-4428-971b-d417ccc9aa57
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தனிமைப்படுத்த தேவையில்லாத திட்டத்தின்கீழ் ஜெர்மனியிலிருந்து 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு SQ325 விமானம் சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 5.36 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானம் முனையம் 3ல் மாலை 4.25 மணிக்குத் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினையால் அதன் வான்வெளியைத் தவிர்க்க பயணப் பாதை மாற்றியமைக்கப்பட்டது. இதனால் சிங்கப்பூர் வந்தடைய தாமதமானதாக தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் பயணம் செய்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். இவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.

மாறாக, அவர்களுக்கு அதிகபட்சம் நான்கு முறை கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும்.