தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்குறையுள்ள பெரியோரின் வாழ்நாள் கற்றலுக்கு $4 மி. நிதி

1 mins read
7ea27a02-b327-470e-beb0-61e3a0df5fff
-

பயிற்­சிக்­கும் திறன் மேம்­பாட்­டுக்­கும் செல்ல விரும்­பும் உடற்­குறை உள்­ளோ­ருக்­காக புதிய $4 மில்­லி­யன் நிதி ஒன்றை தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் ஐந்து சமூக மேம்­பாட்டு மன்­றங்­களும் இணைந்து ஏற்­ப­டுத்தி உள்­ளன. அந்த நிதி­யின் தொடக்க நிகழ்வு நேற்று நடை­பெற்­றது.

உடற்­கு­றை­யுள்ள ஒவ்­வொரு பெரி­ய­வ­ரும் தங்­க­ளது படிப்பு தொடர்­பா­ன கட்­ட­ணங்­க­ளுக்­கும் கற்­றல் ஆத­ரவு சாத­னங்­களை வாங்­க­வும் $1,000 வரை நிதி உதவி பெறு­வர்.

இதன் மூலம் சுமார் 4,000 உடற்­குறை உள்­ளோர் பயன்­பெ­று­வர்.

'த தெமா­செக் டிரஸ்ட்-சிடிசி லைஃப்லாங் லேனிங் எனே­பி­ளிங் ஃபண்ட்' எனப்­படும் இந்த நிதியை எஸ்ஜி எனே­பிள் அமைப்பு நிர்­வ­கிக்­கும்.

உடற்­குறை உள்­ளோ­ரின் வாழ்­நாள் கற்­ற­லுக்கு உத­வும் நோக்­கம் கொண்­டது இந்த நிதி. 18 வயது அள­வில் சிறப்­புக் கல்­விக்­கான பள்­ளி­களில் சான்­றி­தழ் பெற்ற பின்­னர் கற்­கும் வாய்ப்­பு­கள் பற்றி பொது­வா­கக் கவ­லைப்­படும் சில­ருக்­கும் இந்­நிதி ஆத­ர­வுக் கரம் நீட்­டும்.

மெய்­நி­கர் வாயி­லாக நடை­பெற்ற தொடக்க நிகழ்­வில் பங்­கேற்­றுப் பேசிய மத்­திய சிங்­கப்­பூர் வட்­டார மேயர் டெனிஸ் புவா, உடற்­குறை உள்ள பெரி­ய­வர்­

க­ளுக்கு தொழிற்­கல்­வி­யில் தொடர் பயிற்­சி­கள் மேற்­கொள்ள வேண்­டி­ய­ அவசியமும் சுய வாழ்க்­கைக்­கான திறன்­களும் தேவைப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.