கட்டுமான நிறுவனங்களுக்கு மின்னிலக்கத் திறன் விருதுகள்

2 mins read
120fd764-ded1-4d61-bc47-f2cef328597a
பிளாட்டினம் விருது பெற்ற 'பாய லேபார் குவார்ட்டர்' கட்டடத் திட்டம். படம்: லெண்ட்லீஸ் -

கட்­டட கட்­டு­மான ஆணை­யத்­தின் (பிசிஏ) ஒருங்­கி­ணைந்த மின்­னி­லக்­கத் திறன் விரு­து­கள் அறி­விக்­கப்­பட்டு உள்­ளன.

இரண்டு கட்­டு­மான நிறு­வ­னங்­

க­ளுக்­கும் இரண்டு கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளுக்­கும் அந்த விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.

உற்­பத்­தித்­தி­ற­னை­யும் மீண்­டெ­ழும் திற­னை­யும் அதி­க­ரிக்­கும் வண்­ணம் கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளின் பல்­வேறு நிலை­களில் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­க­ளைக் கடைப்­பி­டிக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் திட்­டங்­க­ளுக்­கும் இந்த விருது வழங்­கப்­ப­டு­கிறது.

பிளாட்­டி­னம், கோல்டு பிளஸ் மற்­றும் கோல்டு என்­னும் மூன்று வகை விரு­து­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

ஓங் அண்ட் ஓங், வோ ஹப் ஆகிய நிறு­வ­னங்­களும் பாய லேபார் குவார்ட்­டர், காலாங் பல­துறை மருந்­த­கம் மற்­றும் நீண்­ட­கா­லப் பரா­ம­ரிப்பு நிலை­யம் ஆகிய திட்­டங்­களும் விரு­து­க­ளைத் தட்­டிச் சென்­றன.

பிளாட்­டி­னம் விருது பெற்ற ஓங் அண்ட் ஓங் கட்­டு­மான நிறு­வ­னம் தனது ஊழி­யர்­கள் தொலை­தூ­ரத்­தில் இருந்து வேலை செய்ய அனு­

ம­திக்­கும் வகை­யில் மெய்­நி­கர் தொழில்­நுட்­பத்­தில் முத­லீடு செய்­துள்­ளது.

மேலும், பல்­வேறு கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளுக்கு இடை­யில் மின்­னி­லக்­கத்­தைக் கடைப்­பி­டிக்­க­வும் ஊழி­யர்­க­ளுக்­கான உள்­ளார்ந்த பயிற்­சித் திட்­டங்­களை நடத்­த­வும் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பத் துறை ஒன்றை இந்­நி­று­வ­னம் ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அத்­து­டன், கட்­டு­மான மாதிரி வடி­வங்­க­ளை­யும் தேவைக்­கேற்ற வகை­யில் மாற்­றக்­கூ­டிய திறன்­

க­ளை­யும் வளர்க்க உத­வும் சொந்த மென்­பொ­ருள் உரு­வாக்­கக் குழு­வை­யும் இந்­நி­று­வ­னம் அமைத்து உள்­ளது.

இது­போன்ற வச­தி­கள் மூலம் அதி­க­மான தானி­யக்க முறை சாத்­தி­ய­மா­வ­தாக ஓங் அண்ட் ஓங் நிறு­வ­னத்­தின் கட்­ட­டக் கலைப் பிரி­வின் தலைமை நிர்­வாகி அஷ்­வின்­கு­மார் காந்­தி­லால் கூறி­னார்.

நிறு­வ­னத்­தின் பல்­வேறு துறை­

க­ளுக்கு இடை­யி­லான தொடர்­புத்­தி­றன், புதிய தொழில்நுட்ப அறிமுக காரணமாக தொடர்­பற்ற முறை­யில் நீடிப்­ப­தாகவும் அவர் தெரி­வித்­தார்.