தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'நல்லிணக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்தவேண்டும்'

3 mins read
8dd86722-c35c-47d5-a5e6-58c3f073e129
-

தேசிய தினப் பேரணி உரை­யில் பிர­த­மர் இன நல்­லி­ணக்­கப் பராமரிப்புச் சட்­டம் இயற்­றப்­ப­டு­வ­தைப் பற்றி அறி­வித்­திருந்தார்.

சமூக நல்லிணக்கத்தை தொடர்ந்து கட்டிக்காக்க ஒருபுறம் சட்டம் தேவையென்றாலும் அதற்கும் மேலாக சமுதாய பண்புகள், நட்புறவு, புரிந்துணர்வு போன்ற அம்சங்களில் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சர் திரு எஸ்.ஈஸ்வரன் கூறினார்.

மக்­கள் கழக நற்­பணி பேர­வை­யின் ஏற்­பாட்­டில் தேசிய தினப் பேரணி உரைக்­குப் பிந்­திய கலந்து­ரை­யா­ட­லில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

இந்த மெய்­நி­கர் கலந்­து­ரை­யாடலில் அடித்­தளத் தலை­வர்­கள், நற்­பணி பேரவை தொண்­டூ­ழி­யர்­கள், இந்­திய சமூ­கத் தலை­வர்­கள் என சுமார் 200 பேர் நேற்று முன்­தி­னம் கலந்­து­கொண்­ட­னர்.

இன­வா­தம், இனப் பாகு­பாடு, வேலை­யி­டத்­தில் தலையங்கி அணி­வதற்கு அனு­மதி, குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு, நல்­லி­ணக்­கத்தை வலுப்­ப­டு­த்து­தல், சிறு­பான்­மை­யி­னர் எதிர்­கொள்­ளும் வேலை வாய்ப்புச் சவால்­கள் போன்ற விவ­கா­ரங்­கள் இந்த இரண்டு மணி நேர கலந்­து­ரை­யா­ட­லில் பேசப்­பட்டன.

இனப் பாகு­பாடு சம்­ப­வங்­கள் நிக­ழும்­போது அவற்றை எப்­ப­டிக் கையாள்­வது என்ற கேள்வி கலந்துரையாடலில் கேட்­கப்­பட்­டது.

"சிங்­கப்­பூ­ரில் சீன இனத்­தவருக்கு சிறப்­பு­ரி­மை­கள் உள்­ளதா என்ற கேள்­விக்கு வேறு­பட்ட பதில்கள் கிடைக்­கும்.

மூத்த தலை­மு­றை­யி­னர் அவ்­வாறு இல்லை என்று பதி­ல­ளிப்­பர். ஏனெ­னில் பெரும்­பான்­மை­யி­னர் சீனர்­க­ளாக இருந்­தா­லும் அன்று அவர்­கள் ஆங்­கில மொழியைக் கற்க வேண்டி இருந்­தது.

இளைய தலை­மு­றை­யி­ன­ரி­ட­மும் சிறுபான்­மை­யி­ன­ரி­ட­மும் இதைப் பற்றி கேட்­டால், பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு சிறப்­பு­ரி­மை­கள் உள்­ள­தென்­பர், இதில் அவர்­கள் தங்­களது தனிப்­பட்ட அனு­ப­வங்­களைப் பகிர்ந்து­கொள்­வர்.

சமு­தா­யத்­தின் கலா­சார பண்பு நெறி­க­ளுக்கு இணங்க நம்மை எப்­படி மாற்­றிக்­கொள்­வது என்­ப­தைப் பற்றி யோசிக்க வேண்­டும்.

அனை­வ­ரும் தங்­க­ளது கலா­சார அடை­யாளத்­தைக் கட்­டிக்­காக்க முடி­கிறது. அதே வேளை­யில் இதை ஒட்­டு­மொத்­த­மாக பார்க்­கும்­போது, சிங்­கப்­பூர் என்ற பல்­லின நாட்­டில் நம் அனை­வ­ருக்­கும் பங்கு உண்டு," என்ற விளக்கம் இக்கேள்விக்கு தெரிவிக்கப்பட்டது.

சில­ரின் தகாத நடத்­தை­யால் இது­வரை சிங்­கப்­பூர் கட்­டிக்­காத்து வந்த இன நல்­லி­ணக்­கத்­திற்கு களங்­கம் விளை­வித்­திட சந்­த­ரப்­பம் கொடுக்­கக்­கூ­டாது என்றும் கல ந்துரையாடலில் வலி­யு­றுத்­தப்பட்டது.

வேலையிட இனப் பாகுபாடு குறித்து நியாயமான வேலை நடைமுறைகள் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் வேலைக்கான மொழி தேவைகள் இனப் பாரபட்சத்திற்கு இடம்கொடுக்காது உண்மையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கலந்துரையாடலில் கூறப்பட்டது.

இனம் தொடர்­பான கேள்­வி­க­ளுக்கு அப்­பால், வெளி­நாட்டு ஊழியர்­களை வேலைக்கு வைத்­தி­ருக்­கும் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்கு குறைந்­த­பட்சம் $1,400 மாத சம்­ப­ளம் வழங்க வேண்­டும் என்ற அறி­விப்­பின் தொடர்­பி­லும் கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­டன.

இதன் தொடர்­பில், லிட்­டில் இந்­திய வர்த்­த­கர்­கள் வேலைக்கு ஆள் சேர்ப்­ப­தில் சவால்­களை எதிர்­கொள்­வ­தா­க­வும் அங்­குள்ள சில்­லறை வர்த்­தக கடை­களில் வேலை செய்ய உள்­ளூர்­வா­சி­கள் முன்­வரு­வ­தில்லை என்­ப­தும் கலந்து­ரை­யாடலில் கூறப்­பட்­டது.

அதற்கு சம்­பள உயர்­வால் வியா­பா­ரத்தை நடத்­தும் செலவு அதி­க­ரிப்­பது இன்­றி­யமையாதது என்­றும் புதிய விதி­முறை நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்கு நியா­யமன சம்பளத்தை தரு­வதே அதன் நோக்­க­மா­கும் என்றும் விளக்கப்பட்டது.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்று காலத்தில், பேர­வை­யின் திட்­டங்­களை மெய்­நி­கர் பாணி­யில் வழி நடத்­தி­னோம்.

"இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­து­டன் இணைந்து மதிய உணவைக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கும் திட்­டத்­தை­யும் செயல்­ப­டுத்­தி­னோம். கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தும் ரத்­து­செய்­யப்­பட்ட சில நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தொட­ரும்," என்று தெரி­வித்­தார் மக்­கள் கழக நற்­பணி பேர­வை­யின் தலை­வர் திரு கி. ராம­மூர்த்தி.