இணைய மளிகை வர்த்தக நிறுவனத்திற்கு $11,000 அபராதம்

இணைய மளிகை வர்த்தக நிறுவனத்திற்கு $11,000 அபராதம்

1 mins read
ff4a77ea-7ada-46f9-84d4-9504b21d688b
வேலையில் ஈடுபட்டுள்ள அவர்பசார் எசென்ஷியல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் ஊழியர்களும். படம்: அவர்பசார்.காம் -

இறைச்­சி­யை­யும் மீன் வகை­க­ளை­யும் உரி­மம் வழங்­கப்­ப­டாத குளிர் பதன வச­தி­யில் வைத்த குற்­றத்­திற்­காக இணைய மளிகை வர்த்­தக நிறு­வ­ன­மான அவர்­ப­சார் எசென்­ஷி­யல்ஸ் நிறு­வ­னத்­திற்கு 11,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. தவறு நேரா­மல் பார்த்­துக்­கொள்­ளா­மல் இருந்­த­தற்­காக நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் முக­மது ஷஃபிஸான் சைக் அப்­துல் காத­ருக்கு 9,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­கள் பாது­காப்பு விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றாமல் இறைச்­சி­யை­யும் மீன் வகை­க­ளை­யும் கையாண்­டதை சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.இத­னைத் தொடர்ந்து மொத்­தம் சுமார் 437 கிலோ­கி­ராம் எடை­கொண்ட இறைச்­சி­யும் மீன் வகை­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.