ஜூலை முதல் 20 இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி

ஜூலை முதல் 20 இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி

2 mins read
97290e56-fd72-4d1c-b6b3-1802fd4e033a
-

சிங்­கப்­பூ­ரில் கேடிவி மன­ம­கிழ் மன்­றங்­கள், விடு­தி­களில் கொவிட்-19 தொற்று ஏற்­பட்­டதை அடுத்து அதைத் தடுக்­கும் வகை­யில் கடந்த ஜூலை மாதம் 400க்கும் மேற்­பட்ட இர­வு­நேர விடு­தி­கள் இரண்டு வார காலம் மூடப்­பட்­டன.

அவற்­றில் தொழிலை மாற்­றிக்­கொண்ட ஏறத்­தாழ 20 இர­வு­நேர விடு­தி­கள் மட்­டுமே மீண்­டும் செயல்­பட அனு­ம­திக்­கப்­பட்­டன. இதை­ய­டுத்து கிளப்ஸ் ஸ்தி­ரீட்­டில் இருக்­கும் 'பார் என்­கேடி' என்ற இர­வு­நேர மது­பா­னக் கூடம் செப்­டம்­பர் 7ஆம் தேதி செயல்­ப­டத் தொடங்­கி­யது.

என்­றா­லும் அது கடு­மை­யான நிபந்­த­னை­களை நிறை­வேற்ற வேண்டி இருந்­தது. $2,000 செல­வில் பல மாற்­றங்­களை அந்த மது­பா­னக்­கூ­டம் செய்­தது.

ஜூலை மாதம் தடை அகன்­றதை அடுத்து பரி­சோ­த­னை­களில் வெற்றி பெற்று எழுத்து மூல­மான சான்­றி­தழ்­க­ளைப் பெற்­றால்­தான் இர­வு­நேர விடு­தி­கள் தொழிலை நடத்த முடி­யும் என்று நிபந்­தனை விதிக்­கப்­பட்­டது.

ஊழி­யர்­க­ளுக்கு ஏழு நாளும் கொவிட்-19 பரி­சோ­தனை நடத்த வேண்­டும். பிரத்­தி­யேக படச்­சா­தன வசதி எல்­லா­வற்­றை­யும் உள்­ள­டக்­கும் வகை­யில் இருக்க வேண்­டும் போன்­றவை புதிய பாது­காப்பு நட­ வ­டிக்­கை­களில் உள்­ள­டங்­கும்.

வெளி­யில் இருந்து மக்­கள் பார்க்­கும்­படி சன்­னல் கண்­ணா­டி­கள் இருக்­க­வேண்­டும். தனி அறை­கள் அனைத்­தும் பூட்­டப்­பட வேண்­டும். கர­வோக்கே இயந்­தி­ரங்­கள் போன்­றவை வரு­கை­யா­ளர்­க­ளின் கண்­ணில் படும்­படி இருக்­கக் கூடாது என்­ப­தெல்­லாம் நிபந்­த­னை­களில் உள்­ள­டங்­கும்.

இத­னி­டையே, ஒவ்­வொரு விடு­திக்­கும் தகுந்­தாற்­போல் ஒவ்­வொரு விண்­ணப்­பத்­தின் ஒட்­டு­மொத்த பரி­சீ­லிப்பு நேர­மும் வேறு­பட்டு இருக்­கும் என்று வர்த்­தக தொழில் அமைச்­சும் நீடித்த, நிலைத்­தன்மை சுற்­றுப்­புற அமைச்­சும் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

இடத்தை வந்து பரி­சோ­திக்­கு­மாறு கேட்டு பல இர­வு­நேர விடு­தி­களும் அதி­கா­ரி­க­ளி­டம் விண்­ணப்­பித்து இருப்­ப­தாக சிங்­கப்­பூர் இர­வு­நேர கேளிக்கை தொழில்­து­றை­யி­னர் சங்­கம் தன்­னி­டம் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

இர­வு­நேர கேளிக்கை துறை உள்­ளிட்ட பல நட­வ­டிக்கைகளுக்­கும் செயல்பாட்மிடைத் தொடங்க க­வும் எச்­ச­ரிக்­கை­யு­டன் பொது­மக்­க­ளின் சுகா­தார நல­னுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யில் படிப்­ப­டி­யாக தொடர்ந்து அனு­மதி வழங்­கப்­படும் என்று இரண்டு அமைச்­சு­களும் கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.