தோ பாயோ ஈஸ்டில் மூடப்பட்ட தனியார் ஒட்டுமொத்த காய்கறிச் சந்தை

தோ பாயோ ஈஸ்டில் மூடப்பட்ட தனியார் ஒட்டுமொத்த காய்கறிச் சந்தை

2 mins read
2868ebb9-0ad9-4a3f-b4b8-e772dadadc65
-

தோபாயோ ஈஸ்ட் லோரோங் ஏழில் உள்ள ஒட்­டு­மொத்த இர­வு­நே­ரக் காய்­க­றிச் சந்­தை­யில் சில­ருக்­குக் கிருமி தொற்­றியது தெரியவந்­த­தைத் தொடர்ந்து அச்­சந்தை கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­ முதல் இரண்டு வாரங்­க­ளுக்கு மூடப்­பட்­டி­ருக்­கிறது.

கடந்த 30 ஆண்­டு­க­ளாக இயங்கி­வ­ரும் அச்சந்தை, வழக்­க­மாக திங்­கட்­கி­ழமை முதல் சனிக்­கி­ழமை வரை, இரவு 11 மணி­யி­லி­ருந்து அதி­காலை 5 மணி வரை திறந்­தி­ருக்­கும்.

அந்­தச் சந்தை தனி­யா­ரால் நடத்­தப்­படும் காய்­கறி விநி­யோக இடம் என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு நேற்று அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது. சந்­தையை நடத்­து­வோர் தாமா­கவே முன்­வந்து அதை மூடி­ய­தா­க­வும் அமைப்பு கூறி­யது.

அந்த இடத்­தில் மிகக் குறை­வா­ன­வர்­களே சென்று காய்­க­றி­கள் வாங்­கு­வ­தால் உணவு விநி­யோ­கத்­தில் சொற்ப பாதிப்பு மட்­டுமே ஏற்­படும் என்று அமைப்பு குறிப்­பிட்­டது.

சந்தை மூடப்­பட்ட விவ­ரம் பற்றி சீனச் செய்­தித்­தா­ளான லியான்ஹ சாவ்­பாவ் நேற்று செய்தி வெளி­யிட்­டது.

திறந்­த­வெ­ளி­யில் செயல்­படும் சந்­தை­யில் காய்­க­றி­கள் திறந்த பெட்­டி­களில் வைக்­கப்­படும். வாடிக்­கை­யா­ளர்­கள் சேஃப்என்ட்ரி முறை­யைப் பின்­பற்ற வேண்­டும் என்ற விதி­முறை அங்கு கடைப்­பி­டிக்­கப்­பட­வில்லை.

அந்த ஒட்­டு­மொத்­தச் சந்­தை­யி­லி­ருந்­து­தான் காய்­க­றி­களை வாங்­கி­ய­தாக தோ பாயோ லோரோங் ஏழு ஈரச்­சந்­தை­யில் உள்ள காய்­ க­றிக் கடைக்­கா­ரர் ஒரு­வர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­தார். சந்தை மூடப்­பட்­ட­தி­லி­ருந்து பாசிர் பாஞ்­சாங் ஒட்­டு­மொத்தச் சந்­தை­யி­லிருந்து இணை­யம் வழி­யா­கக் காய்­க­றி­களை வாங்கு ­வ­தாக அவர் சொன்­னார்.

இர­வு­நே­ரச் சந்­தை­யு­டன் ஒப்­பி­டும்­போது தற்­போது காய்­கறி விலை சற்று அதி­க­மாக உள்­ள­தாக பாசிர் பாஞ்சாங் சந்தையிலிருந்து வாங்கும் வேறொரு கடைக்­கா­ரர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறி­னார்.